பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XIV

காம்ப்பெல்லே கூறியிருக்கிறான். கோட்டையைக் காம்ப்பெல் கைப்பற்றினான் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் பூலுத்தேவன் என்னவானான் என்பதைப் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. ஆயினும் கதைப்பாடல் கூறும் இச்செய்தி உண்மையல்ல என்பது தெளிவு.

சிவகங்கை, ராமநாதபுரம் பாளையங்கள் கான்சாகிபு–பிரிட்டிஷ் போராட்டத்தில் ஒரு பங்கு வகித்தன என்ற வரலாற்றுச் செய்தியை இப்பாடல் அளிக்கிறது. கான்சாகிபின் கடைசிக் கால வரலாற்றைப் பற்றிப் பல செய்திகளையும் அளிக்கிறது.

பாளையங்கோட்டை,
5 – 12 – 70
நா. வானமாமலை.
பதிப்பாசிரியர்.