பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

திருப்புவனம் விட்டு விடுவேன் நாளை சிவகெங்கை குடியிருப்பு நிலைக்க வொட்டான் கானன்" என்றெழுதி காயிதத்தை யனுப்ப நல்ல

இயலான மாசாவும் பார்த்தேது சொல்வாள்

மாஷாவின் பதில்

"அண்ணேநீ தாண்டவ ராயா - தங்கச்சி

அன்பாக வொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு சிங்கத்தின் குட்டி நீயண்ணே இதற்குச்

சிந்தை தனிலே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம் தங்கையாய் நானிருக்கும் போது உந்தன்

தலை சீமைக்கொரு நாளும் அழிவுவராது சொல்லியும் கானுதுரை வந்தான் எனக்குத்

தோரணச் சீட்டெழுதித் தருகிறே னென்று பவளம் போல் சிவந்திடு வாயால் .. நல்ல

பைங்கொடி யெழுதினதைத் தாண்டவ ராயன் பார்த்துமண மகிழ்ச்சியா யிருந்து நல்ல

பண்பாகச் செங்கோல் செலுத்திவரு நாளில் - மதுரைநகர் கான்சாயபு துரையும் அப்போ

மண்டலிகன்' யோசித்துயேது செய்வானாம்

மாஷாவிடம் கான்சாகிபு கூறுவது

ஏழு மணி வேளையிலே கானு அப்போ

எழுந்திருந்து மாசாவி னரண்மனைக்குள் வந்து முடி மன்னன் துரைகானு சாயபு நல்ல

மோசமிகு மாசாவை யேறிட்டுப் பார்த்து "அடி பெண்ணே துரைமகளே மாசா கானன்

ஆண் பிள்ளையொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு மலையாளம் பார்த்து வரவேணும்" பெண்ணே

மன்னாரு கோவிலும் பார்த்து வரவேணும் இப்படி கானுதுரை சொல்ல tí) T&FfĮ

மாஷாவின் பதில் ஏறிட்டுப் பார்த்தவனுக் கேது சொல்வாளாம் "மலையாளம் போய் பார்த்த பேர்கள் அங்கே

மாண்டவர்க ளல்லாமல் மீண்டவர்க ளில்லை

42. மண்டலிகன்-மதுரை மண்டல அதிபதி, சுபேதார் என்று நவாபு

அரசாங்கத்தில் அப்பதவியின் பெயர்.