பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

முத்து நாய்க்கனையு மழைத்து நல்ல

முடிமன்னன் பொக்கிஷ வீட்டைத் திறந்து உக்கிராண வீட்டைத் திறந்து ஒரு

பெட்டியைத் திடீரென் றெடுத்துவரச் சொல்லி வச்சிர மணிப் பெட்டியைத் திறந்து அப்போ

வரிசைகள் வெளிதனிலே திடீரென் றெடுத்துப் பத்துப் பொன் பொன் போருவை யெடுத்து நல்ல

பச்சைக் கடுக்கனொடு பாகை"யுங் கொடுத்து தங்க வளை முன்கை மூதாரி பசுந்

தங்க மோகன மாலை சரப்பளி கொடுத்து துங்கமிகத் தகட்டு நிலையங்கி நல்ல

துதிபெறு வெள்ளாளனுக்கு வெகுமதிகள் செய்து அழகு நான் பார்க்க வேணுமண்ணே சற்றே

ஆனை மேல் நீயேறி வாவென்று சொன்னார் தளகர்த்தன் வெகுமதிகள் வாங்கி வெகு

தளத்துடனே யானைதனை மூன்றுதரஞ் சுற்றி நேராய்ச் சலாம் வாங்கி நின்று அப்போ

நேரில் நிற்கு முத்து வடுகையரைப் பார்த்து

- முத்துவடுகன் பேசியது

மெத்தவெகு துடித்தனஞ் செய்யாதே நம்மிட

மேனாட்டு கள்ளருட னெதிர்த்து பகையாதே பேட்டி நான் செய்துவரு மட்டும் நல்ல

பேரான சின்னையா நல்லண்ணே தேவா தெற்கு தென் பாரிசந் தனிலே நல்ல

திடமாக யானை கட்டுங் கல்லுக்கு மேற்கே சாருநிகர் மேல்வீடு தன்னில் முத்துக்

சுவர்ணகாமி மகன் கொலுவினி லிருந்தார் வலுவீர கெம்பீரா பராக்கு என்று

மதிமந்திரி யானை மேலிருந்து கும்பிட்டான் ஆண்டவனே முத்து வடுகையா என்று

அரசர் புகழ் காராளன் கும்பிடும் போது சலுகைப் பெரியுடையா னீன்ற ராஜ

சுவர்ணகாமி மகன் முத்து வடுகையன்

முத்துவடுகருடன் பேச்சு

உத்தரவு முல்லை முத்துவடுகன் மணிமார்பா இப்போ

உன்னழகு கண்ணாலே பார்த்தேனடா அண்ணே

50. தலைப்பாகை,