பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

முக்குறுணி மருந்து குண்டு போட்டு அதற்கு

முதலான கிடாவெட்டி பொங்கலு மிட்டு குபீலென்று ஒரு பளித்தா தீர்த்தான் அப்போ

கொட்ட மிடுகான்சாய்பு கூடாரத் தெறித்து கூடாரக் கயிறு மறுந்து அப்போ

குயிலென்று ஏழு குதிரைக் காலுந் தெறிந்து ஏழெட்டுப் பேர்கள் தலையுடைய அப்போ

இதை கான்சாய்பு கண்ணாலே பார்த்து நம்மைப் போலே யொரு மனிதன் இதிலே இருக்கிறான் திருப்புவனம் வாங்க முடியாது - திருப்புவனம் வாங்க முடியாது என்று

சிவகங்கை மேல் சாரி நடந்திட்டான் காணன் ராத்திரிக் கிராத்தியே நடந்து அப்போ

நலமான சிவகங்கைப் பேட்டை தனைவளைத்து அரண்மனை அக்கினியாய்க் கொளுத்தி மறவர் ஆறுகால் சவுக்கையைத் தீயா யெரித்து - மேல்வீட்டுக் கம்பளியை யெரித்து நானு மீசையின் மேற்கை போட்டு மேற்குமுகந் திருப்பி பட்டண மெல்லாங் கொள்ளை யடித்து அப்போ

படைமன்னன் கிழக்குமுகந் திருப்பியே கானன்

வேறுார்கள் கொள்ளை

தஞ்சாவூர் வெள்ளிக் குரிச்சி மறவர் சமஸ்தான பாத்திவ னுரையுங் கொள்ளை யடித்து கானூரணிக் கணவாயை வெட்டி அப்போ கான்சாய்பு நடந்திட்டான் திசை மதுரைக் கோட்டை சந்திரகுல முத்து வடுகையர் அப்போ

சாமியும் காளையார் கோயி லிருந்து தாண்டவ ராயப் பிள்ளைக்குத் அவரும்

தயவாக காயுத மெழுத லுற்றாரப்போ

முத்துவடுகன் தாண்டவராயனுக்கு எழுதுதல்

அண்ணே வா தாண்டவ ராயா - மதுரை

ஆளுகிற கான்சாய்பு சிவகங்கை வந்து

அரண்மனையை யக்கினியாய்க் கொளுத்தி நமது

ஆறுகால் சவுக்கையைத் தீயா யெரித்து

சீமை யெல்லாங் கொள்ளை யடித்துத் கானு

திசைமதுரைக் கோட்டையைப் போய்ச் சேர்ந்திட்டா னண்னே