பக்கம்:காரும் தேரும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கருத்தும் 115

தம் மாணவர்க்குச் சொல்லி, செவி வழியாகக் கல்வி வளர்ந்த காலம் அதுவாகும்.

உயர்குடிப் பிறப்பு, இரக்கம், கடவுள் வழிபாடு, பல நூற் பயிற்சி, பயிற்று வன்மை, நற்பண்பு, உலகியல் அறிவு முதலியன நிரம்பப் பெற்றவரே அன்று ஆசிரியராக மதிக்கப் பெற்றனர். மாணவர் மனக்கோணலைச் சரிப்படுத்தும் பணி ஆசிரியருடையதாகக் கருதப்பட்டது. மாணவனும், பாடங் கேட்கும்பொழுது பொழுதொடு சென்று, ஆசிரியர்க்கு வழிபாடாற்றி, அவர் குணத்தோடு பொருந்தப் பயின்று, அவர் குறிப்பின் வழியே நின்று, இருவென இருந்து, சொல்லொனச் சொல்லி, பசித்துண்பவனுக்கு உணவிடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆர்வம் மிகுந்து, சித்திரப் பாவையைப் போலக் குணத்தினோடு அடங்கி, காதானது வாயாகவும், மனமானது கொள்ளுமிட மாகவும், முன்பு கேட்டனவற்றை மீண்டும் கேட்டு, அவ் வாறு கேட்டனவற்றை மறந்து விடாது உள்ளத்தில் விடாது பற்றியமைத்துக் கொண்டு, ஆசிரியர் போய் வா என்ற பின் போதலே பாடங் கேட்டலின் வரலாறாகக் கருதப் பட்டது.

கோடன் மரபே கூறுங் காலை பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தோடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து இருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன.ஆர் வத்தன ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவிவா யாக நெஞ்சுகளன் ஆகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து போவெனப் போதல் என்மனார் புலவர்.

-நன்னூல்; பொதுப்பாயிரம்: 40

இந் நூற்பாவில் பவணந்தி முனிவர் என்மனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/117&oldid=554108" இலிருந்து மீள்விக்கப்பட்டது