பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115 கால்டுவெல்

பிரிக்கப்பட்ட முத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் விலை குறிக்கப்படும். பலநாடுகளிலிருந்தும் வணிகர்கள் பணத்துடன் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள். சில நாள்களில் எடைக்கும் தகுதிக்கும் தக்கவாறு எல்லா முத்துக்களையும் வியாபாரிகள் வாங்கிக் கொள்வார்கள்.

திருநெல்வேலி மக்கள் தொகை கணக்கீடு பற்றிய குறிப்புகளை எழுதிய ஆசிரியர் தம் புத்தகத்தில் மேலே கண்ட செய்தியையும் சேர்த்திருக்கிறார். அவர் முத்துக்குளித்தலைப் பார்வையிட்டு முந்நூறு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டிருக்கின்ற முத்துக்குளித்தல் முறைப்படிதான் இன்றும் அது நடைபெறுகிறது என்றும் தெளிவாகாத சில காரணங்களால் இப்பொழுது தீவினையால் கரைகள் வியாபாரத்திற்குச் சிறந்த விலையுயர்ந்த முத்துக்களைக் கொடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் (தமிழ் நாட்டில் முத்துக்குவியல் பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகிய திரு எஸ். அருணாசலம் அவர்கள் நூல் காண்க. - ந.ச.).

போர்ச்சுகீசியர் ஆட்சியில் தூத்துக்குடி

கொச்சியிலிருந்து வந்த கப்பற்படை கடற்கரையிலுள்ள மகம்மதியர்களை அடக்கி வென்றதும் அதில் வந்து இறங்கிய பாதர் மிச்சல் வாஸும் அவருக்கு உதவி செய்ய துணைவந்த துறவிகளும் பரவர்களை மதம் மாற்றிய பொழுது, 1532 இல் போர்ச்சுகீசியர் முதன்முதல் தூத்துக்குடியில் தோன்றினர். அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 என்றும் அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து வடக்கேயுள்ள முப்பது கிராமங்களில் வசித்து வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய கிராமங்களுள் ஒன்று தூத்துக்குடிக் கிராமம். ஆனால், எப்பொழுது அங்கு நிலையான போர்ச்சுகீசியக் குடியேற்றம் ஏற்பட்டது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. 1543 இல் புகழ்பெற்ற சேவியர் தூத்துக்குடிக்கு வந்தபொழுது அங்கே ஒரு போர்ச்சுகீசியக் கவர்னர் இருந்தார். எனவே அவர்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியது 1532 முதல் 1542 வரை உள்ள பத்து வருடகால அளவிற்குள்ளேதான் இருக்க வேண்டும். ஆனால், 1532 முதல் சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை மதம் மாற்றப்பட்ட பரவர்களைப் போலவே துத்துக்குடி மக்களும் போர்ச்சுகீசிய மக்கள் என்று மதிக்கப்பட்டார்கள்.

தூத்துக்குடி என்ற இடத்தின் சரியான ஆங்கிலப் பெயர் ‘டூட்டி கொரின்’ என்பது (மொழி நூலறிஞர் கால்டுவெல்லா இப்படி எழுதுவது? - ந.ச.). ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் தூத்துக்குடி என்பதிலுள்ள