பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஒடிய ஆறுகள் அங்கங்குக் கால்களே ஊன்றிய ஊர்களெல்லாம் கூடிய செந்நெல் கொழித்திடச் செய்திடும் கோலத் தமிழகமே ! தெண்கடல் முத்தொடு சேர்ந்து படர்ந்திடும் செம்பவளக் கொடியும் மண்ணதில் தங்கமும் வல்லிரும் பின்னன வாழ்ந்திடும் தாயகமே ! கல்வி வளர்ந்திடப் பண்பு செழித்திடக் கற்றவர் வாழியவே செல்வ மிகுந்திட எங்களின் தாயகம் சீருடன் வாழியவே! 58