பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - - வருவாரோ? வாராரோ Π வருவாரோ வாராரோ மணவாளன் தைநாளில்-வருவாரோ உறவாடி ஒருகன்னம் சிவப்பேறச் செய்தார் ஒசிந்தோடி நாணினேன் மறுகன்னம் புதைத்தார் -வருவாரோ பொருள் சேரும் தமிழ்ப்பாடல் பாடுவேன் புதிதான முறையாலே ஆடுவேன் மருள்மாலை வருவார் நான் ஊடுவேன் மகிழ்வாக்கித் தருவார்பின் கூடுவேன் -வருவாரோ சொன்னசொல் அத்தனையும் மறப்பாரோ சுடுநிலவில் துயருண்டு கிடப்பேனே என்னினைவு இல்லாமல் இருப்பாரோ எத்தனைநாள் இத்துயரம் பொறுப்பேனே -வருவாரோ 65