பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கன்னங் கரிய உடல்-எழிலைக் காட்டும் சிவந்த கண்கள் மின்னும் அழகினையே-கண்டு மெய்ம்மறந் தங்குகின்றேன் கன்னங் கருகிறந்தான்-எனினும் காதலிற் சிக்கிவிட்டேன் இன்னும் பாடிடுவாய்-என்னை இன்பத்தில் ஆழ்த்திடுவாய் என்னலும் அவ்விசைதான்-மீண்டும் எங்கும் நிறைந்ததுவே கன்னலின் சாற்றினிமை-உவமை காட்டுங் தரமிலதே யாழில் எழுமிசையோ-குழலோ யாதெனக் கூறிடுவேன்? பாழுல கைமறந்தேன்-அங்தப் பைம்பொழில் இன்னிசையால் 97