பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. ச் ச ரி யம் பிரமும் செடியும் கரிந்து போன பாலைநில வெம்மையிலே அவர்கள் இங்தக் காட்சியைக் கண்டு வியந்து போனர்கள். செங்கதிரவன் இரக்கமின்றி எறிக்கும் வெய்ய கதிரில் அங்த இளங் காதலர்களின் அன்பு வாடிப் போகவில்லே ஒளி விடுகிறது. அழகு நிரம்பிப் பருவம் வந்த அக் காதலனும் காதலியும் பாலே நிலத்தில் நடப்பவர்களாகத் தோற்றவில்லை. மலர் மலி சோலைகளும் நீர்மலி வாவிகளும் உள்ள வழியிலே செல்பவர்களைப் போல மகிழ்ச்சியுடன் நடக்கிருர்கள். எதிரே வந்த சிறு கூட்டத்தார் இந்தக் காட்சி யைக் கண்டு வியக்காமல் இருப்பது எப்படி ? “எவ்வளவு ஒற்றுமை ! அழகிலும் அறிவிலும் அன்பிலும் ஒருவருக்கு ஒருவர் சளேத்தவராகத் தோற்றவில்லையே ' என்ருர் ஒருவர். 'முறுக்கேறித் திரண்ட தோள்களையுடைய இந்தக் காளையின் அன்பு நிழலிலே மென்மையே உருவம் படைத்து வந்தாற்போன்ற இந்தப் பெண் செல்லும் காட்சியைக் கண்டது கண்செய்த பாக் கியம். நமக்குக்கூட இது பாலேவனமென்ற நினைவு மறந்துபோகிறதே ' என்ருர் மற்ருெருவர். 'நீர் சொல்வது உண்மைதான். இவர்களைக் காணும்போதே கண் குளிர்கிறது. நல்ல மெல்லிய மலர்களால் ஆகிய இரட்டை மாலேயைக் கண்டது போல இருக்கிறது. கடவுளின் திருவருள் எத்தனே ஆச்சரியமானது. காதலென்ற ஒன்றை மனிதர்களுக்கு அளித்துத் துன்பத்தையும் வெம்மை யையும் பொருட்படுத்தாத இனிமையை அதில்