பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியம் 25 வலிமை என்று கூறுவார் கூறுக ! இந்த ஊழ்வினைத் திறம் கன்று! என்ன ஆச்சரியம்! ஊழ் வினேயே ! பாலே ! நீ நல்லை !” பைத்தியம் பிடித்ததுபோலக் கூத்தாடும் அவ ருடைய வார்த்தைகளைத் தெளிந்து கொள்ளாமல் மற்ற இருவரும் மயங்கி நின்ருர்கள். 'ர்ே கண்ட அதிசயம் என்ன, சொல்லும்.” 'இந்த இரண்டு பேர்களையும் நான் அறிவேன்.” 'அறிந்தால் என்ன ? அதில் அதிசயம் என்ன இருக்கிறது ?" 'இவர்கள் இளங்குழங்தைகளாக இருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். அதே சாயல்; அதே முகவெட்டு ; அந்தப் பெண் இருக்கிருளே, அவளுடைய கண்களே நான் மறக்கவில்லை ; அன்று கண்ட கண்களே; இப்போது மருட்சியுங்கூடக் கண்டேன்.” 'இளமையிலிருந்து பழகிய நண்பின ரென்று தானே சொல்லப் போகிறீர்? அது பெரிய ஆச் சரியமா ? வடகடலில் இட்ட நுகத்தில் தென்கடலில் இட்ட கழி சேர்வதுபோல எங்கிருந்தோ வரும் ஆடவனும், எங்கிருந்தோ வரும் மடமகளும் ஒரு கணத்தில் ஊழ்வசத்தால் மனம் ஒன்றி மணமகிழும் வரலாறுகளே நாம் கேட்டிருக்கிருேம் ; படித்திருக் கிருேம். அந்தக் காதல்தானே ஆச்சரியம் ? பலநாள் பழகினவர் காதல் செய்வதில் என்ன வியப்பு இருக் கிறது ?” "கொஞ்சம் பொறுங்கள். பழகினவர்கள் ஒன்று வதில் ஆச்சரியம் இல்லே, பழகாதவர்கள் பொருந்து வதுதான் அதிசயமென்பதை நானும் அறிவேன். ஆளுல் இவர்கள் காதல் அதனினும் அதிசயமானது!” 'விஷயத்தை விளங்கச் சொல்லாமல் மூடு மங் திரம் போட்டால் காங்கள் எப்படித் தெரிந்து கொள்வோம் !” காவி. 4