பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலமரும் கண் 61. உலவின. அவன் இப்பொழுது சினங்கரந்து சென்ருன்; உலகமும் ஒய்வு பெற்று இரவுக் கன்னி யின் அணேப்பிலே சாங்தி பெறப் போகிறது. ஆனால், அவளோ-? இனிமேல்தான் அவ. ளுடைய உயிருக்கும் தனிமைக்கும் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது 1 ஐயோ பாவம் ! மாலே வந்ததென்ருல் மனம் கடுங்கி உடல் வெயர்த்துக் குலேகுலைகிருள். * அவன் வந்துவிடுவானென்ற கினேவு அவள் உள்ளத்தில் பசுமையை வைத்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக அவள் பட்ட இடும்பை பெரிதல்ல. சில நாட்களாக அவளிடத்தில் தோற்றும் தளர்ச்சி அச்சத்தை உண்டாக்குகிறது. ஏன் ? செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த பொழுதுகள் பலவற்றை அவள் கழித்துவிட்டாள். இன்று அங்தப் பொழுது அவள் உயிரை வாட்டத் தனியே வரவில்லை. படைப்பலத்துடன் வந்திருக்கிறது. அவள் வைத்து வளர்க்கிருளே, அந்த முல்லைக் கொடியிலிருந்துதான் - அந்தப் படை புறப்படுகிறது. அருமை செய்து பாதுகாத்த அந்த முல்லைக்கொடியை அவள் இவ் வளவு நாட்களாகக் கவனிக்கவே இல்லை; இன்று அது தன்னக் கவனிக்கும்படி செய்துவிட்டது. கம்மென்று வீசும் முல்ல்ைப்பூவின் நறுமணம் அவளே ஒரு கணம் ஆட்கொண்டது. அப்பொழுதுதான் அவளுக்குத் தான் வளர்த்த அப் பூங்கொடியின் நினைவு கன்ருக வந்தது. பார்த்தாள் ; முல்லே பூத்து முறுவலிக்கிறது. பைங்கொடி முல்லையின் மணம் எங்கும் கமழ்கிறது. அந்த மணத்தை நுகர வண்டி னங்கள் வந்து சுழல்கின்றன ; முரல்கின்றன. - தான் வளர்த்த முல்லைக்கொடி என்னும் பேரழகி பூத்துப் பொலிந்து கிற்கும் அழகை அவள் கண் பார்த்தது. அந்த அழகிலே அவள் மகிழ்ச்சியைக் காணவில்லை. மலர்ந்த மலர்களில்ே மொய்த்துக் காத