பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பெரியபுராணம் ஒரு பெருங்காவியம் கந்தம் செந்தமிழ் மொழியில் எத்தனையோ புரா னங்கள் இருக்கின்றன. வடமொழியில் பதினெண் புராணங்கள் வழங்குகின்றன. அவ் வடமொழிப் புரா ணங்கள் எல்லாம் சிவன், மால், அயன், சூரியன், அங்கி முதலிய தெய்வங்களைப் பற்றியனவாகும். தமிழிலுள்ள புராணங்கள் பலதிறப்பட்டனவாகும். அவையனைத் தும் சமயத்தொடர்புடைய நூல்களே. தேவர், அரசர், முனிவர், அடியார்கள் ஆகியோர் வரலாற்றை உயர்வு கவிற்சி அமையக் கற்பனை கலங்கனியப் புனேயப் பெற் றதே புராணமாக விளங்கக் காண்கிருேம். சிறந்த தலங்களின் வரலாறுகள் தல புராணங்களாக நிலவ -வும் காண்கிருேம். அவைகளில் பெரும்பாலன, கவி ஞர்களின் கற்பனைத்திறனைப் பொற்புறக் காட்டும் கண்ணுடிகளாகவே அமைந்துள்ளன. எனினும் அப் புராணங்கள், மக்கள் உணர்ந்து உய்யத்தக்க உயர்ந்த உண்மைகள் பலவற்றைத் தம்முள்ளே பொதித்து பொலிகின்றன. சேக்கிழார் பெருமான் செய் தருளிய பெரியபுராணம் பிற புராணங்களைப் போன்றதன்று. இறைவன்பால் நிறையன்பு செலுத்தி வீடெய்திய தமிழ்நாட்டு மெய்த் தொண்டர் வரலாறுகளைப் பெருங்காப்பிய கயங்க ளோடு தொகுத்துரைக்கும் பெருமையுடையது. இதைப்போன்றதொரு புராணம் தென்மொழியிலும், வடமொழியிலும் வேறில்லை என்றே சொல்லலாம். இத னேப் பல்கதைக் கோவை என்று சில்லோர் கருதுகின்ற னர். பெரியபுராணம் அத்தகையதன்று. தங்கிகரில்லாத தலைவர் ஒருவரது வரலாற்றையே காவிய கலங்கள் கனியக் கவினுற உரைப்பது அந்நூல்.