பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இவருள் எவரும் சேக்கிழாருக்கு ஒப்பாகார். கலைமகள் தன் கணவனகிய நான்முகன் காவை மறந்து சேக்கிழா ரது செந்தமிழ் நாவிலேயே குடிகொண்டுவிட்டாள். கடல் அலேகளைக் கணக்கிட்டு விடலாம்; கடற்கரையில் உள்ள மணலை எண்ணிவிடலாம்; கடலுள் வாழும் மீன்களையும் கணித்துவிடலாம்; வானில் ஒளிரும் மீனினங்களையும் வகுத்து எண்ணிவிடலாம்; ஆனல் சிவனடித் தொண்டர்கள் பெருமையை அளவிட்டு உரைத்தல் என்பது சேக்கிழார்க்கு எளிதாகுமே அல்லா மல் தேவர்கட்கும் அரிதாகும்.” இங்ங்ணம் பலவாறு சேக்கிழாரது புலமை நலத்தை வியந்து புகழ்ந்தார் உமாபதிசிவர்ை. சேக்கிழார் காலத்திற்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டு கட்குப் பின்னர்க் கவியரசராகிய கம்பர் விளங்கினர் என்பர். அவர் மூன்ரும் குலோத்துங்கன் காலத்தில் விளங்கிய கவிஞர். சேக்கிழாரோ இரண்டாம் குலோத் துங்களுகிய அநபாயனுக்கு அமைச்சராக விளங்கியவர். ஆதலின் கம்பர், சேக்கிழார் பெருமையை நன்கு உணர்க் திருக்க வேண்டும். அதனாலேயே அவர் தாம் பாடிய இராம காவியத்தின் முதற் பாட்டிலேயே சேக்கிழா ரைப் பின்பற்றிவிட்டார். 'உலகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன்' என்று தொடங்கும் பெரியபுராணம், உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என்று தொடங்கும் இராம காவி யம். இரண்டும் ஒத்த சந்தமுடைய ஒரினப் பாடல்கள். இங்ங்னம் கம்பர் தம் காவியத்தில் பல இடங்களில் சேக்கிழாரது வாக்கையும் கோக்கையும் எடுத்தாண்டுள் ளார். இதுவன்றிக் கம்பர் தாம் பாடிய திருக்கை வழக்கம் என்னும் நூலில் சேக்கிழார் வாழ்க்கை