பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கண்ணகியின் மறுமொழியைக் கேட்ட மன்னன் 'கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை யாகாதே, அஃது அரச நீதியன்ருே?’ என்ருன். கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதைக் காட்டும் பொருட்டு "என் சிலம்பிலுள்ள பரல் மாணிக்கம்," என்ருள். அரசன், 'என் தேவியின் சிலம்பிலுள்ள பரல் முத்து,” என்று மொழிந்து, கோவலனிடமிருந்து பெற்ற சிலம் பைக் கொணருமாறு பணித்தான். ஏவலாளன் அதனேக் கொணர்ந்து வைக்கவே, கண்ணகி அச் சிலம்பை எடுத்து ஓங்கி நிலத்தில் எறிந்து உடைத்தாள். அப் போது அதனுள்ளிருந்த மாணிக்கங்கள் மன்னவன் வாயில் சென்று தெறித்தன. பாண்டியன் இறத்தல் - கண்ணகியின் சிலம்பினின்று தெறித்த மாணிக்கங் களேக் கண்ட மன்னனது வெண்கொற்றக் குடை தாழ்ந்தது. கையிலிருந்த செங்கோல் தளர்ந்து தரையில் விழுந்தது. அவன் உள்ளமும் உடம்பும் ஒருங்கு கடுங்கின. பொற்கொல்லன் புன்சொல்லேக் கேட்டு நீதி தவறிய யானே அரசன்! யானே கள்வன்! புகழ் மிகுந்த தென்னுட்டு ஆட்சி என்னல் பழியுற்றதே. என் வாழ்நாள் இன்ருேடு முடிவதாக!” என்று சொல்லி மயங்கி வீழ்ந்தான். அரியணையிலேயே அவன் உயிர் நீங்கியது. மன்னன் இறந்ததை அறிந்த கோப் பெருங் தேவியும் உடன் உயிர்நீத்தாள். > -o கண்ணகி மதுரையை எரித்தல் இங்ஙனம் கணவனுக்குற்ற கடும்பழியைப் பாண்டி யன் முன்னர் வழக்காடி ஒழித்த கற்பரசியாகிய கண்ணகி, தான் கொண்ட வெகுளி தணிந்தாளில்லை.