பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அதற்குப் பெயர் அமைத்த திறம் பெருவியப்பை அளிப்பதாகும். வரலாற்றுடன் பின்னிக்கிடக்கும் மூன்று பேருண்மைகளும் கண்ணகியின் காற்சிலம்பை எண்ணிய அளவில் நுண்ணிதில் புலனாகும். அக் கற்பரசியின் பொற்புடைய சிலம்பே கதைக்கு அடிப் படையாய் நிற்பது என்பதை நீளங்னேந்து, சிலப்பதி காரம் என்று பெயர் நிறுவிய திறம் அடிகளாரின் ஆழ்ந்த புலமையைப் புலப்படுத்தும். மேலும், அவர் வலியுறுத்தும் மூன்று திேகளுள் நடுநின்ற பத்தினிச் சிறப்பே இலக்கியத்தின் உயிர்காடி என்பதையும் அமைப்பு முறையால் விளக்கியருளினர். அதேைலயே பதிகத்தை அடுத்து அமைத்த உரைபெறு கட்டுரையில் நாடெங்கும் பத்தினிக்குக் கோயில் அமைத்து விழா எடுத்த சிறப்பினைக் குறிப்பிட்டார். இங்ங்னம் இவர் தம் காவியத்திற்கு உளங்கவரும் வகை யில் பெயர் சூட்டி, நூற்பயனும் சொல்லிய திறம், வேறு எந்த நூலுக்கும் அமையாத தனிச்சிறப்பாகும். கண்ணகியின் கற்புமாண்பை விளக்கும் இக் காவியத்தில் அடிகளார் முதற்கண் தனிப்பட்ட எச் சமயக் கடவுளர்க்கும் வாழ்த்துக் கூறவில்லை. உலகி னர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் திங்களுக்கும் வெங்கதிரோனுக்குமே மங்கலவாழ்த்துக் கூறுகின்ருர். காவியத் தலைவியின் வரலாறு, தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளிலும் நடைபெற்றதாகலின் அதனே முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டார். அவளது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள் மூவேந்தருடைய தலைநகரங்களி லேயே நடைபெற்றனவாதலின் அப் பெரும் பிரிவுகட் குப் புகார், மதுரை, வஞ்சி என்று பெயர் சூட்டினர். கா. மூ-4