பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காவியச் சுவைகான விரும்புவார்க்குப் பெருவிருந்தாக அமை5துள்ளது. இந் நூல் சிலப்பதிகாரத்தினும் எளிமை வாய்ந்த கடை உடையதாகும். கற்பவரின் நுண்ணறிவிற்கு ஏற்பப் பண்ணமைந்த சுவை பயக்கும் சொல்துட்பம் பொருள் துட்பம் திட்பமுற அமைந்ததாகும். இதன் கண் காணப்படும் மலே, கடல், ஆறு, தீவு, காடு, நாடு, நகர் முதலியவற்றின் இயற்கை வருணனைகள், கற்பவர் உள்ளத்தில் நேரில் கண்டாற் போன்ற உணர்ச்சியை ஊட்டும் உயிரோவியங்களாக ஒளிர்கின்றன. மேலும், இந் நூலின்கண் இக் காலத்தில் வேருெரு வகையாலும் விளங்காதனவாகிய சில தெய்வங்களின் பெயர்களேயும் அத் தெய்வங்களை வழிபடும் முறைமை யையும் அறியலாம். ஆயிரத்தெண்ணுாறு ஆண்டு கட்கு முற்பட்ட தமிழகத்தின் சமயங்லேயை உணர் குத் தக்க கருவியாக விளங்குவது இந் நூல். அக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெருநகரங்கள் சிறப்புற்று விளங்கிய நிலையை இந் நூலால் அறியலாம். அற்றை நாளில் விளங்கிய சில அரசர், சில முனிவர் முதலியோருடைய வரலாறு களேயும் இதனுல் அறியலாம். இத்தகைய மணிமேகலைக் காவியத்தின் சிறப்பை உணர்ந்த உரையாசிரியர்கள் பலர், தாம் வரைந்த உரை களில் இந் நூலிலுள்ள பாடல் அடிகளையும் கருத்துக் களேயும் மேற்கோளாக எடுத்துக் காட்டுகின்றனர். இளம்பூரணர், பேராசிரியர், கச்சினர்க்கினியர், தெய் வச் சிலேயார் போன்ற இலக்கண உரையாசிரியர்களும், பரிமேலழகர், அடியார்க்குகல்லார் போன்ற இலக்கிய 密