பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கணிமேகலை பளிக்கறை புகுதல் மணிமேகலை தன்மீது கொண்ட காதல்வேட்கைய ய்ை உதயகுமரன் வருகிருன் என்பதைத் தெரிந்தாள். உடன் வந்த தோழியாகிய சுதமதியிடத்தே அச் செய்தியை உணர்த்தினுள். அதைக் கேட்ட சுதமதி அவளே ஆங்கிருந்த பளிக்கறையில் புகுத்தி, உள்ளே தாழிட்டு இருக்கச் செய்தாள். மணிமேகலையைத் தேடிக்கொண்டு உவவனத்தினுள்ளே புகுந்த உதய குமரன் பளிக்கறையின் பக்கமாக கின்ற சுதமதி யிடத்தே மணிமேகலையைக் குறித்து வினவினன். அவள் மக்கள் யாக்கையின் இழிநிலையை எடுத்துக் கூறி அவனைத் தெருட்ட முயன்ருள். அவளது மொழி கள் உதயகுமரன் செவியுள் புகவில்லை. இவ்வேளையில் பளிக்கறையின் உள்ளிருந்த மணிமேகலையின் உரு வத்தை அவன் கண்டான். அப் பளிக்கறையுள் புகு தற்கு முயன்று அதன் வாயிலே நாடினன். அதனேக் காணமுடியாமையால் கவன்று, சுதமதியை நோக்கி, ‘மணிமேகலை எத்திறத்தினள் இயம்புதி,' என்ருன். சுதமதியின் அறிவுரை உதயகுமரன் தீய உள்ளத்தை மாற்ற எண்ணிய சுதமதி, அவனே நோக்கி “மணிமேகலை தவ ஒழுக் கத்தை உடையாள். குற்றம் புரிந்தாரைச் சபிக்கும் ஆற்றலு முடையாள். காம விருப்பம் சிறிதும் இல்லாத வள். நீ அவளே விரும்புதல் தக்கதன்று,” என்று கூறி ள்ை. அது கேட்ட உதயகுமரன், வெள்ளம் மிக்குப் பெருகுமாயின் அதனைத் தடுத்து நிறுத்தும் தடையும் உளதோ ? மணிமேகலையைச் சித்திராபதியால் எவ் விதத்திலும் சேர்வேன்,' என்று வஞ்சினம் கூறி அகன்