பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப் பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!

காலைப் பாட்டு

இல்லத்தினிலே எகினாள்; ஏகி யாழின் உறையினை எடுத்தாள்; இசையில் 'வாழிய வையம் வாழிய' என்று பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள். தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த் தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின் காதின் வழியே கருத்தில் கலக்கவே, மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர். அமைதி தழுவிய இளம் பகல், கமழக் கமழத் தமிழிசை பாடினாள்.

வீட்டு வேலைகள்

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்; செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்; பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக் குடிக்க இனிய கொத்து மல்லிநீர் இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு நிறக்க அன்பு நிறையப் பிசைந்த முத்தான வாயால் முழுநிலா முகத்தாள் "அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.

கணவனுக்கு உதவி

வந்த கணவன் மகிழும் வண்ணம் குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி, துளிதேன் சூழும் களிவண்டு போல அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து, மின்னிடை துவள, முன்னின் றுதவி, வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின்,

குழந்தைகட்குத் தொண்டு

" பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்! தூய பசும்பொன் துளிகளைப் போன்ற சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச்