பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32
அடுத்திருந்து போல்
அமையும்-கடற்கிணையாம்.
ஆண்டு பலவும்
அறமே புணையாகத்
தாண்டி உழைத்தலுத்தும்
தள்ளாமை-ஈண்ட்டைந்தீர்
சென்றநாள் என்னும்
செழுங்கடலில் மாப்புதுமை
ஒன்றன்பின் ஒன்றாய்
உருக்காட்டி-பின்மறையக்
கண்டிருந்த தங்கள்
அடிநிழலில் காத்திருந்து
பண்டிருந்த, செய்தி
பருகோமோ-மொண்டு மொண்டு!
வில்லியலூர் விட்டு
விடியப் புறப்பட்டோம்
மெல்லநடக் கும்வெள்ளை
மாட்டினால்-தொல்லைச்
கறுப்புக்குத் தக்கதாய்க்
காளையொன்று வாங்கப்
பொறுப்புள்ள ஆளில்லை!
பூட்டை-அறுத்தோடி
மூலைக் குளத்தண்டை
முள்வேலந் நோப்பினிலே
காலைப் பரப்பியது
கண்டுபின்-கோல்முடித்துக்
காட்டிப் பிடித்துயந்து
வண்டியிலே கட்டிநான்
ஓட்டிகத்தேன்: இங்கே
உயர்வான-நாட்டுப்
புடவைபல தேவை
அதனால் புதுவுைக்
கடைகளிலே வாங்கக்
கருதி-உடன்வந்தேன்"
குடும்ப விளக்கு