பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
கல்வி
அம்மையீர் சொன்ன வண்ணம்.
அனைத்துக்கும் கல்வி வேண்டும்!
செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின்
பண்புகள் தெரிதல் வேண்டும்!
இம்மக்கள் தமக்குள் மேலோர்
இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ. நன்மை
அம்மட்டில் இங்குண் டாகும்.
என்றனள் விருந்து வந்த
மலர்க்குழல் என்பாள் அங்கு
தன்றுபூ வரச நீழல்
நடுவினில் நகைமுத் தோடு
தின்றுதா வரான் என்னும்
இளையவன் நிகழ்த்து கின்றான்;
சென்றுநாம் அதையும் கேட்போம்
தமிழ்த்தேனும் தெவிட்டல் உண்டோர்
நாவரசன் நகைமுத்து உரையால்
அகவல்
ஆளிழுக் கின்ற அழகிய வண்டி
இந்த வூரில் இருப்பதும், நமது
வில்லிய ணூரில் இல்லா திருப்பதும்
ஏன்அக் கான இளையோன் கேட்டான்.
நகைமுத்து
நகைமுத் தென்பவள் தகைத்துக் கூறுவாள்:

  • கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும்

தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்.
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்
இழுப்பய வறியவன்ர் ஏறினோன் செல்வன்!
இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்; அத்தாளில்
தன்னி லோடிகள் தருவிலக் கிழுப்பவை
என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்."
53