பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

171


இல்லை நமக்கென் பதுபுல னானது.
இனிவருங் காலத் தினில்அது கற்போம்!
நல்லெண்ணம் உடையீர், நயம்பட உரைப்பீர்!
நம்பிழை அறிந்து, நம் சொற்களை மறப்பீர்!
நமது நெஞ்சம் நன்குநீ ரறிவீர்!
இறந்தார் வாயின் இன்னாச் சொல்வினை
பொறுத்தல் நோன்பெனப் புகலும் தமிழ்மறை
உண்மை தேறி, உரைத்தது இகழ்வெனத்
தாம்நினைந் திட்ட சொற்களைப்
போற்றுதல் வேண்டா எனப்புகன் றனமே!