பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


191. தர்மத்தின் பக்கம் இரு

உனக்கு வேண்டியவர்கள் பட்டியலைத் தயார் செய்வதில்
அவசரப் படாதே!
மெதுவாகச் செய்!
உன் இதயத்தில் உள்ள கருணையால்
நீ உன் பட்டியலில் சேர்ப்பவர்கள்
உன் இதயத்தில் படும் புண்களைக் கூடப்
பெரிது படுத்த மாட்டார்கள்!
தீமையின் நடுவில் நல்லதாயிருத்தல்
நல்லதில் மோசமாக இருத்தல்
இவை, மன்னிக்க முடியாத இயல்புகள்!
நீ நன்றாக நடத்தப்படவில்லையா?
எழுந்து நில்!
மற்றவர்கள் உன்னைக் கண்டனம் செய்தால்
பெருந்தன்மையுடன் விளங்குக!
கயிறு இழுவையில் போராட்டம் நிகழ்வுறின்
நீ நிற்கும் முனை தர்மமாக இருக்கட்டும்
நினைவிற் கொள்க!
வளர்த்த பூனையும் காட்டிய அன்பும்
உன்னிடம் திரும்பவந்து சேரும்!
சின்ன மனிதர்களிடம் பெருந்தன்மையுடையவனாக
நடந்து வெற்றி பெறுக!