பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

271


செய்கிறார் என்றால் கிடையாது. அது நாம் பழக்கத்தில் கொண்டு வருவது.

தாய் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பாள். பின் சிறிது நேரம் கழித்து பாதி தின்று கொண்டிருக்கும் பொழுது, அப்புறம் குழந்தை சிறிது கிள்ளிக் கொடுக்கும் இதில் குழந்தையா தாய்க்கு மிட்டாய் கொடுக்கிறது என்று பொருள். அது ஒரு உபச்சாரம் அவ்வளவு தான். அதுபோல உலகிலுள்ள எல்லாப் பொருளும் கடவுளுக்குச் சொந்தம். அவன் தான் உலகம். நீ அன்பினாலே, பெருமையினாலே, பாசத்தினாலே, கொடுக்கக் கூடியது தானே தவிர, அதற்கு இப்படித் தான் பழக்கம் என்றல்ல, நாம் தூய்மையான மனத்தோடு, நல்ல தூய அன்போடு கடவுளை வணங்குவது தான் சிறப்பான பொருள்.

பூவும், தண்ணீரும் போதுமானது. கோயிலில் பலபேர் வருவதினாலே, கடவுளை வழிபடுவதனாலே, ஒரு நல்ல விளக்குப் போட்டால் போதுமானது. அதனால், கோயிலில் நாம் எளிமையாக வழிபாடு செய்யலாம். நம்முடைய மக்கள், நம்முடைய வாழ்க்கையிலும் சரி, கோயில் நிகழ்ச்சிகளிலும் சரி, நிறையப் பணத்தை செலவழித்து விடுகிறோம். நம்முடைய வாழ்க்கைத் தேவைக்கு மேலே, செலவழித்து, பணம் இல்லாமல் கடைசியில் நாம் தொல்லைப்படுகிறோம். எனவே, வாழ்க்கைச் செலவுகளாக இருந்தாலும் சிக்கனமாகச் செய்ய வேண்டும். சமயச் சடங்குகளாக இருந்தாலும் சிக்கனமாகச் செய்ய வேண்டும். கடவுள் உலகத்தில் எந்தப் பொருளையும் எதிர்பார்த்துக் காப்பதில்லை. அவர் நீ வருவாயா என்று எதிர்பார்க்கிறார், நீ கூப்பிடுவாயா என்று எதிர்பார்க்கிறார். நீ அன்புடன் அழைப்பாயா என்று தான் எதிர்பார்க்கிறார். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அதனாலே, காசுகளை வைத்து, பணத்தை வைத்து, சடங்குகளின் ஆடம்பரங்களை வைத்து கடவுளை நாம் வழிபட