உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

283



"பொதும்புறு தீப்போற்
புகைதெரி யாப்புலன் தீக்கதுவ
வெதும்புறு வேனை
விடுதிகண் டாய்விரை யார்நறவந்
ததும்புமந் தாரத்திற்
றாரம் பயிற்றுமத் தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன்
அவிர்சடை வானத் தடலரைசே”

-திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம்-36
ஊர் நாய்

மாணிக்கவாசகர் நாடுமுழுவதும் சுற்றிப் பார்த்து நாட்டு மக்களின் நாடி பிடித்து, நன்மை தீமைகளை இனம் காட்டுகிறார்-பிறர்மீது வைத்துக் காட்டவில்லை-தன்மீதே வைத்துக் காட்டுகிறார். இஃது ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோரின் இயல்பு. அடியவர்கள் தம்மை யுடைய தலைவனை-சிவபெருமான்ை நினைந்து உருகிக் காதல்மீக் கூர்ந்து அவனடியை நாடுகிறார்கள். ஆனாலும் அறிவிலாத மனிதனோ, தன்னையுடைய தலைவனை உண ராமையின் காரணமாக அன்பு காட்டுவதில்லை. தலைவனை நாடிச் செல்வதில்லை. இறைக்கும் கிணறு ஊறுவதுபோல அன்பு காட்டுதலே அன்பைப் பெற்றுத் தரும்.

இங்ஙனம், தன்னுடைய தலைவனை ஏத்தி வாழ்த்தி வாழத்தெரியாத மனிதனை ஊர்நாய் என்றும் ஏன்? ஊர் நாயினும் மோசமானவன் என்றும் திருவாசகம் கூறுகிறது.

நாய்ப் பிறப்பு இழிவான பிறப்பு. எனினும் தனிப்பட்ட வர்களுடைய வளர்ப்பால்-அரவணைப்பால் அது நலமாக வாழும். இன்பமாக இருக்கும். பாற்சோறும் பஞ்சணையும் பெறும். வளர்ப்பவரின் விருந்தினர்கள் தட்டிக் கொடுத்துத் தகுதியுண்டாக்குவார்கள். அவர் தம் வீட்டுக் குழந்தைகள்