உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



அணிந்துரை
(தமிழமுது)

அமுதம் உண்டாரை உடல் அளவில் வாழ்விப்பது என்பர், தமிழ் அமுதோ, பருகினோரை உள்ளத்தால் வாழ வைப்பது, உள்ளத்தால் மட்டுமா? உணர்வாலும் அறிவாலும் வாழவைப்பதும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தமிழ் அமுது என்னும் நூலும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது.

எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை சமுதாய நோக்கில் காண்பது அடிகளாரின் தனி இயல்பு. அதை இந்நூலில் பரக்கக் காண்கிறோம், தாம் எடுத்துக் கொண்ட தலைப்புகளில் எல்லாம் சமுதாய நலனையே தலையாகக் கொண்டு கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள். “எந்த ஒன்றும் வாழ்வுக்குரிய - சாதனமேயாம். சாதனங்களையே சாத்தியங்கள் என்று நம்புவதும் அதற்காகவே வாழ்வதும் அறிவுடைமையாகாது”- 'வாழ்க்கை' என்பது கடமை என்ற செயற்பாட்டுக்காகவே (பக்.32) தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் 'தவம்' என்று கருதுகின்றார் (பக்.34). இத்தகைய அடிகளாருடைய கருத்துக்கள், சமுதாய நலனில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டிற்கும் அருள் நோக்கிற்கும் சான்றுகளாகும்.

"வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட நடை முறைச் சாத்திய மற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை . வாழ் வாங்கு வாழ்தல் என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது” என்று கூறுவதன் மூலம் திருக்குறள் ஓர் வாழ்வியல் நூல் என்பதை நிலை நிறுத்துகிறார்.

அறியாமையும் கொடிய வறுமையும் இருக்கும் நாட்டில் சமத்துவமும், ஒருமைப்பாடும் நிலவா; மனித மாண்புகள் மலரா. மனிதே வாழ்வே சிறக்காது. ஆகவே, ஒரு நாட்டில் வறுமையையும், அறியாமையையும் ஒழிக்கும் வரையில், அங்கே உள்ள மக்கள் அனைவரும் சமம் என்பது