உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

538

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


மனப்போக்கு வளர்ந்ததால், நம்முடைய போராட்ட உணர்வு தவருள பாதையில் செலவிடப்படுவதையும் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்.

"நமக்குப் போர்க்குணம் மிகுதியும் உண்டு. ஆனால் ஒரே ஒரு குறை. நமது போர்க்குணம் மனிதர்களுடன் போராடுவதிலேயே கழிகின்றது. மனித குலத்தின் பொதுப்பகையாகிய-சாதி வேற்றுமைகள், வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபடுத்தப்படுவதில்லை” எனவே அடிகளார்-சமயத் தொண்டு பொருளுடையதாக வேண்டுமானால்-சமுதாய வாழ்வில் படிந்துள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவரானார்.

தீண்டாமை முற்றும் ஒழிக்கப்பட வேண்டும். சாதி வேற்றுமை உணர்வு அழிக்கப்பட வேண்டும் வறுமையை விரட்டிய வாழ்வு - மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். சைவ சமயத்தாரிடையிலும், சாதியால் சைவர் என்பார்-பிறருடன் ஒன்றாக அமர்ந்து உண்ணாமை போன்ற முறைகேடு மாற்றப்பட வேண்டும்.

இறை வழிபாட்டில்-மக்கள் உணர்வு சிறக்க ஏதுவாக அவர்கட்கு விளங்கும் தமிழிலேயே வழிபாடு (அருச்சனை) நடைபெற வேண்டும்.

இந்தி முதலான வேற்றுமொழி ஆதிக்கம் உருவாக இடந்தரக்கூடாது. வறுமையை விரட்டும் பணியே தலையான பணி. அதற்கு ஏற்ப மக்களைத் திறமான முயற்சியும், தொழிலும் - வாய்ந்தவராகச் - செய்ய வேண்டும் என்பன போன்றப் பல சீரிய எண்ணங்களைக் கொண்டவராகவும், அதனை மக்களிடம் பரப்பும் தொண்டில் ஈடுபட்டவராகவும் விளங்கினார்.

இளமையிலேயே அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் ஈர்க்கப்பட்டவரானார். அண்ணா அவர்களின் கொள்கையில் உடன்பாடு கொள்ள முடியாத