பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜடை பில்லை.

1

பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதை எங்கே வைத்திருந்தேனே என்று யோசித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பெட்டியை மேலே இருந்து இறக்கிப் பார்க்கச் சோம்பல் இடங் கொடுக்கவில்லை. இப்போதுதான் ஒழிந்தது.

அவன் - பிள்ளையாண்டான் . காலேஜுக்குப் போயிருந்தான். அவர் எங்கேயோ வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்தார். இந்த நேரத்தில் வழக்கமாக வந்து பேசிக்கொண்டிருக்கும் சொக்கநாயகி இன்று என்னவோ வரவில்லை. அவர்களுக்கும் வேலை இல்லையா?

அவருடைய கடையில், நாகரிகமாகச் சொன்னால் கம் பெனியில், முக்கியமான வேலைக்காரர் நாகநாத ஆசாரியார். சாதிப்பட்டத்தை விட்டுவிட்டு நாகநாதன் என்று கூப்பிட அவர் விரும்புவதில்லை."எங்கள் தொழிற் சிறப்பைக் காட்டும் பட்டம் அது’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார். ஆனால் அவர் என்னவோ குலத்தொழிலை விட்டு விட்டுக் கம்பெனி குமாஸ்தாவாகத்தான் இருக்கிறார். அவருடைய மனைவி சொக்ககாயகி. அவளுக்கு இந்தக் காலத்து நாகரிகம் அவ்வளவாகத் தெரியாது. சாது உபகாரி.

பக்கத்துத் தெருவில் குடியிருந்தபடியால் அடிக்கடி வந்து கவனித்துக்கொள்வாள். எங்கள் வீட்டு வேலைக்காரி மகாராங்கிக்காரி. எதிலும் வெட்டு ஒன்று. துண்டு இரண்டு தான். பற்றுப்பாத்திரம் தேய்க்கிறது. வீடு பெருக்குகிறது.