பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயும் கன்றும்

கன்றுக்குட்டி வர வர நோஞ்சலாகிக் கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்ருெரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித்தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன் அருமையாக வளர்த்த மாட்டின் கன்று அது. அவன் அருமையாக வளர்த்தது மாட்டைத்தான்; அதன் கன்றை அல்ல. கன்று மாடு சுரப்பு விடுவதற்காக உள்ள கருவி என்று எண்ணினானே ஒழிய, அதற்கும் உயிர் உண்டு என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. பால் கறக்கும் குவளை, தீனி வைக்கும் கூடை-இவைகளெல்லாம் அவனுடைய பால் வியாபாரத்திற்கு உதவி செய்தன. அவை பாலைக் குடிக்கின்றனவா? இல்லையே! கன்றுக்குட்டியும் அப்படியல்லவா இருக்க வேண்டும்? பசு மாட்டின் மடியை முட்டிப் பால் சுரக்கும் படி பண்ணிவிட்டுப் பேசாமல் வந்துவிடவேண்டும். அப்படி இல்லாமல் அது மடியை விடாமல் பற்றிக்கொள்கிறதாவது ?இழுக்க இழுக்க வராமல் அது முரட்டுத்தனம் பண்ணினபொழுது பாலகிருஷ்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. "உன் தோலை உரித்துவிடுவேன்!” என்று அவன் கத்துவான்.அந்தப்பேச்சைப்புரிந்துகொள்ளும் சக்தி அந்தக் கன்றுக்குட்டிக்குக் கிடையாது. பக்கத்து வீட்டுப் பால்காரன்உண்மையாகவே ஒரு கன்றுக் குட்டியின் தோலை உரித்து அதற்குள்ளே வைக்கோலை அடைத்துப் பால் குடிக்காத கன்றுக்குட்டி ஒன்றைச் சிருஷ்டி பண்ணியிருக்கிறானே; அதுபோல இவனும் செய்யலாமே என்று யோசித்துப் பார்க்கும் அறிவு அதற்கில்லை. அதனால் அது ஒவ்வொரு தடவையும் தன்