பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்மூகம் வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய் தருவாய் நலமுந் தகவும் புகழும் தவமுந் திறமுந் தனமும் கனமும் முருகா! முருகா! முருகா!' -பாரதியார் பாரதியாரின் கற்பனையாற்றல் சாதாரணமானதல்ல. இந்தக் கற்பனையில் உவமையும், உருவகமும், உருக்காட்சி யும் (Imagery), குறியீடும் (Symbol) நிறைந்து அவர்தம் கவிதைகளைக் கவின் பெறச் செய்கின்றன. நீடித்த உருவகங் களைக் கொண்ட நூல்களும் அவர்தம் படைப்புகளாகும். இவற்றுள் ஞான ரதம் உரைநடை நூலுக்கும், குயில் பாட்டு கதைக் காவியத்துக்கும் எடுத்துக்காட்டுகளாகும். இவற்றுள் குயில் பாட்டு கற்பனையில் கனிந்த அழகான உருக்கமான வெளிப்படையான பொருளைக் கொண்ட ஒரு குயில்பற்றிய கதை. இந்தக் கதை வேதாந்தமாக விரித் துரைக்கவும் இடந் தருகின்றது. பாரதியாரின் முப்பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப் பெறும் கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம்’,” 1. தோ. பா : முருகன் பாட்டு - (1) 2. கண்ணன் பாட்டுத்திறன், பாஞ்சாலி சபதம் : ஒரு நோக்கு என்ற இந்த ஆசிரியரின் இரண்டு நூல் களும் மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை மூலம் (321.1, மேல வெளிவீதி, மதுரை. 625 001) வெளி வந்துள்ளன,