பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குயில் பாட்டு:ஒரு மதிப்பீடு என்று கூறி கண்மூடி இன்பமுறு புன்னகைதான். நின்று முகத்தே நிலவு தர, மாண்டனன். மாடன் செய்த மாயத்தால் இப்பொழுது பீடையுறு புள்வடிவம் உனக்கு வந்தெய்தியது. நின் மன்னவனோ தொண்டை வளநாட்டில் கடற்கரையை படுத்த ஊரிலே மானிடனாய்த் தோன்றி வளருகின்றான். உன்னைக் காட்டில் காண்பான்; நீ கனிந்து இசைக்கும் பாட்டினைக் கேட்பான். பழவினையின் கட்டினால் மீட்டும் நின்மீது காதல் கொள்வான்-இவ்வாறு அந்தத் தென் பொதியை மாமுனிவர் செப்பினார். நான் கேட்டேன்: 'நானோ குயிலுருவம் கொண்டேன். கோமானோ மனித உருபற்றி நின்றான். எம்மிடம் காதல் இசைத்தாலும் கடிமணந்தான் கூடாதோ? இறக்கும் தறுவாயில் இளவரசன் கூறிய சொல் பொய்யாய் முடியுமோ?' என்று. புன்னகையுடன் முனிவர் கூறினார்: பேதைப் பெண்ணே. இப்பிறவியிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்கு மகளாய்த்தான் பிறந்தாய், வினைப் பயனால் மாடனும் குரங்கனும் வன்பேயாய்க் காடு மலையெல்லாம் சுற்றி வருகையில் நின்னைக் கண்டு கொண்டனர். இப்பிறப் பிலும் நீ பண்டுபோல் மன்னவனையே மணப்பாய் என்று கருதி நின்னைக் குயிலாக்கி நீ செல்லும் திக்கிலெல்லாம் நின்னுடனே சுற்றுகின்றனர். நினக்கு இது விளங்க வில்லையா?' என்று. நான் மீண்டும் கேட்டேன். "ஐயோ விதியோ, இறந்தவர் வாழ்கின்றவரைத் துயருறுத்தல் நீதியோ? பேய்கள் என்னைப் பேதைப்படுத்தி, பிறப்பை மறக்கச் செய்து வாதைப் படுத்தி வருமாகில், நான் என் காதலரைக் கானும் போது காய்சினத்தால் ஏதேனும் தீங்கிழைத்தால் என் செய்வேன்? இதற்கு மாற்றொன்று இல்லையா ?’ என்று.