பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இசைக் கவஈச்சி 55 இசையின் சிறைப்பைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். செங்குட்டுவன் கண்ணகிப் படிமத்திற்குக் கல்கொணர இமயம் சென்று திரும்ப முப்பத்திரண்டு திங்கள்களாயின. அவன் பிரிவிற் காற்றாது துயருற்றிருந்த கோப்பெருந்தேவி வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றாள். செங்குட்டுவன் திரும்பும் நாள் அறிவிக்கப்பெறுகின்றது. அதற்கு முதல் நாள் இரவு கோப்பெருந்தேவி நானிலப் பண்களைக் கேட்ட வண்ணம் உறங்காதிருப்பதைக் காட்டுகின்றார் இளங்கோ வடிகள். குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும், உழவ ரோதைப் பாணியும், கோவலர் ஊதும் குழவின் பாணியும், புன்னையின் அடியில் அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் அற்புமாகச் சித்திரிக்கப்பெறுவதில் இசையின் சிறப்பை அறிய முடிகின்றது.' கள்ள மூப்பின் அந்தணர் கோலத்தில் வந்த சீவகன் எந்த மனிதரையும் கண்ணெடுத்துப் பாரேன் என்று சூளுரைத்துக் கொண்ட சுரமஞ்சரியை இசையினால் வென்ற செய்தியைச் சீவக சிந்தாமணி எடுத்தோது கின்றது." மூவர் தேவாரங்களும் பண்களாலமைந்தவை. நற்றமிழ் ஞானசம்பந்தன் வேட்கள மேல் மொழிந்த பண்ணியல் பாட வல்லார்கள் பழியொடு பாவமிலாரே' என்பன போன்ற பாடற்பகுதியால் தேவாரம் இசைத்தமிழில் அமைந்தது என்பது போதரும். அப்பர் பெருமானின் திருத்தாண்டகப் பாடல் ஒன்றை இசையேற்றிப் பாடினால் அதனால் பெறும் இன்பம் சொல்லுந்தரமன்று. முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் (தேவாரம் 6.25:7), அப்பன் நீ அம்மை நீ (தே. 6.95:1) என்ற பாடல்களைத் தருமபுர ஆதீனம் சுவாமிநாதன் 10. சிலப், 3.27; 217 - 250 11. சீவக. சிந், 209 12. தேவாரம் 1.9:11.