பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டுவந்தான் பண்ணி விசைத்தல் வொலிகலனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்.” என்று காட்டி அவற்றை இசையேற்றி அதுபவிக்க வேண்டும் என்கின்றார். - ఊళడ్జ}ళ தண்ணும் பாட்டினொடு தாளம்-மிக நன்றா வுளத்தழுந்தல் வேண்டும்-பல பண்ணிற் கோடிவகை இன்பம்-நான் பாடத் திறனடைதல் வேண்டும்’ என்று இசைத்தமிழ் தனக்கு ‘யோக சித்தியாக அமைய வேண்டும் என்று விழைகின்றார். இங்ஙனம் பாட்டில் ஆசை கொண்டவர் பாரதியார்; பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். பாட்டின் துட்பங்களை யெல்லாம் நாடி பிடித் தறியக் கூடிய இசை மருத்துவர். இதனால்தான், ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?* என்று கூறிப் போந்தார் என்று கருத இடந் தருகின்றது. 17. த. பா: நிலாவும் வான்மீனும் காற்றும்-5 18. தோ. பா. யோகசித்தி-7 இ! 19. கு. பா. குயிலும் ம்ாடும்-அடி 99.100)