பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை őå தகைய கருத்தும் அதில் இருக்கலாம் என்று எண்ணவும் இடம் ஏற்படுகின்றது. ஆலால் இதைச் சற்று ஊன்றிப்பார்க்க வேண் டியது இன்றியமையாத தாகின்றது. காவியச் சுவை குறைந்துள்ள சமயநூல்களைக் கருதினா லும், பெருங்கவிஞன் தன் மனோபாவத்தின் ஆற்றலாலும், கலைவாணியின் அருளினாலும் தன்படைப்பில் சொற்சுவை யும் பொருட்சுவையும் மிகுந்து காட்டும்படி அமைக்க முடியும் என்பதற்கு நம் நாட்டுக் காவியங்களிலும் மேனாட்டுக் காவி யங்களிலும் பல சான்றுகள் உள்ளன. ஆனால் 'குயில் பாட் டில் வெளிப்படையாகவுள்ள கதையின் போக்கும் ஆற்றொ ழுக்குபோல் தங்குதடையின்றிச் செல்லும் சொல்லினிமை யுமே சிறப்பாக மதிக்கத்தக்கவை யாகும். ஒருகால், வேறோர் உட்கருத்தும் அதில் அமைந்திருந்தால் அதனை அறியாமல் கவிதையின் அழகையும் நலத்தையும் அதுபவிக்க முடியும் என்ற உண்மையை மறுத்தற்கில்லை. என்ற போதிலும், கவிஞன் பதித்திருக்கும் உள்ளுறைப் பொருளை நாம் அறியும் பொழுதுதான் காவியத்தின் சுவையை முற்றிலும் சுவைத்த வர்களோவோம். சங்கப்பாடல்களின் உள்ளுறையும் இறைச்சி யும் மனத்திற்குத் தெளிவான பிறகு நாம் பெறும் கவிதையது பவமே தனி என்பதை நாம் உணர்கின்றோமன்றோ? இங்ஙனம் உட்கருத்தை வெளிப்படையாகத் தெரியாத வகையில் சுவை பயக்குமாறு கவிஞர் எவ்விதம் நிகழ்ச்சிகளை நிரல்பட அமைந்துள்ளார் என்று நோக்குவதில் உண்மை யிலேயே மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். பாரதியார் தம், குயில் பாட்டு' என்ற கற்பனைக் கதைக் காவியத்திற்கு வேதாந்தப் பொருள் விழைகின்றார் என் பதைப் பாட்டின் இறுதி மூன்றடிகள் தெரிவிக்கின்றன. வேதாந்தப் பொருள் என்பதை இரண்டுவிதமாகக் கொள்ள லாம். சாதாரணமாக உள்ளுறைப்(உட்பொருள் உட்கருத்து)