பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii தெறியைப் பின்பற்றியதற்கான தக்க சான்றாகும். குயில் பாட்டு : ஒரு மதிப்பீடு என்று முடியும் இறுதி இயலும் பேராசிரியர் திறனாய்வு நோக்கில் குயில்பாட்டை அணுகி யுள்ளார் என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். இந்த நூலுள் நயமான பகுதிகளை விளக்கிக் கூற வந்த இடங்களில் சுயமான உவமைகளைஆண்டிருப்பது பாராட்டுக் குரிய ஒன்றாகும். குயில் இசை கவிஞர் செவியில் விழ விழ, காதல் வெறி ஏறிக்கொண்டே போகிறதாம். அதைக் குறித்து எழுதுமிடத்தில் அவருக்கே யுரிய தனித் தன்மையில், "காற்றழுத்தமானியில் பாதரசம் ஏறுவதுபோல் ஏறிக் கொண்டே போகிறது (பக். 2) என்று எழுதியுள்ளார். மற் றோர் இடத்தில் இயற்கைக்கும் கவிஞனுக்குமுள்ள இணக்க மான் உறவைக் குறிப்பிட்டு விளக்கும்போது, 'உறங்கும் நிலையில் தாய் குழந்தையை அணைவதைப் போல (பக் 41 என்று குறிப்பிடுகின்றார்; இந்த உவமையைப் படிக்கும்போது மணிவண்ணனை உகந்த பெரியாழ்வார் நெஞ்சில் நிற்கிறார். பித்துப்பாட்டு எட்டுத் தொகைகளில் வரும் உவமைகளையும் பாரதி ஆண்டுள்ள உவமைகளையும் ஒப்பிட்டுக் கூறு மிடத்தில் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் பயன்படுத்தி யுள்ள உவமை, என்னைப் போன்ற சங்கப்பாக்களில் உள்ளம் பறிகொடுத்திருப்போர்களுக்கு உகப்பாக இல்லை. குயில் பாட்டைப் படிப்போர்க்குச் சலிப்பே தோன்றாது. அதுபோலக் குயில் பாட்டைப்பற்றிப் பேராசிரியர் எழுதி யிருக்கும் இந்த நூலும் சலிப்பைத் தராது. பழந்தமிழ் இலக் கியத்திலிருந்து புதுத்தமிழ் இலக்கியம்வரை பேராசிரியர் படித்தறிந்தவர் என்பதை இந்நூல் காட்டிக் கொடுக்கிறது. குயில் பாட்டில் ஆளப்பெறும் காதல் நெறிகள் பெரிதும் மரA சார்ந்தவையே என்று அவர் சாதிக்குமிடங்கள் தக்க