பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் உள்ளுறை 71 பொருத்தமுடைய உள்ளுறை பாரதியாரின் குயில் பாட்டுக்குப் பொருத்தமுள்ளது ஒன்றையும் காட்ட முடி யாதா? அஃது வெற்றெனத் தொடுக்கப் பெற்ற கவிதை தானா? என்று எண்ணிப் பார்க்கும் போது 'முடியும்' என்ற விடை நம் மனத்தில் உதிக்கின்றது. குயிலைக் கவிதாசக்திகவிதைக் காதலி--என்ற குறியீடாகச் சொல்ல முடிகின்றது. கவிதா சக்தி கவிஞரை நாடுகின்றது; கவிதைக் காதலி அவரை நாடுகின்றாள். கவிஞர் கவிதையிடம் எல்லையில் லாத மோகம் கொள்ளுகின்றார். பிறபாடல்களும் கவிஞரின் இந்த மோக உணர்ச்சியைக் காட்டுகின்றன. பண்டைச் சிறுமைகள் போக்கி என்நாவிற் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே’ என்று விநாயகப் பெருமானை வேண்டுவதிலும், பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்" என்று பராசக்தியைக் காணி நிலம் தருமாறு வேண்டும் பாட்டிலும், தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடுவேன்; எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி இராதென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய்" என்று கலைவாணியை வேண்டுவதிலும் இம் மோகத்தைக் கண்டு மகிழலாம். இந்த மோகவெறிதான் அவரை, 4. தோ. பா, வி. நா. மாலை-30 5. டிெ: காணிநிலம்-3 6. டிெ 9 ம் சக்தி-5