பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு 77 love never runs smooth) grairp soft@so Bmi-s offlurrës, செகப்பிரியரின் கூற்றை நினைவு படுத்துவதாக உள்ளது. ஆனாலும் காதலின் நிலைத்த வெற்றியைப்பற்றிச் சிறிதும் ஐயமுற வேண்டியதில்லை என்பதை இப்பாட்டைப் பயிலும் நாம் அறிகின்றோம். காதல், காதல், காதல், காதல் போயிற், காதல் போயிற் சாதல், சாதல், சாதல், என்ற காதல் இசையின் பல்லவி நம் உள்ளத்தில் இடையீ டின்றி ஒலிக்கத் தொடங்கி விடுகின்றது. இப்பாட்டில் காதலர் இருவர் ரோமியோ ஜூலியத் என்னும் இருபெரும் ஆங்கிலக் காதலர்களைப்போல் தங்கள் தீப்பேற்றின் காரண மாகத் தங்கள் பேரின்பக் காதல் வாழ்வின் தொடக்கத்திலே மரணத்தால் இணை பிரிகின்றனர். காதலன் (சேரமன்னன்) இறக்குந் தறுவாயில், சாவிலே துன்பமில்லை; தையலே இன்னமும்நாம் பூமியிலே தோன்றிடுவோம்; பொன்னே நினைக்கண்டு காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; இன்னும் பிறவியுண்டு; மாதரசே, இன்பமுண்டு நின்னுடன் வாழ்வனினி நேரும் பிறப்பினிலே" கூறும் மொழிகள் காதலின் நிலைபெற்ற வெற்றியின் முர சொலியாகக் கருதலாம். அடுத்த பிறவியிலும் அந்த உண்மைக் காதலரைத் துன்புறுத்தும் பேய்களும் மாயங்களும் பலவாகும். இந்தப் பொய்ம்மைப் பிசாசுகளையும் மாயை களையும் சிதைத்துக்கொண்டு காதல் கதிரவன் ஒளிவீசி உதயம் செய்கின்றான். இதுவே குயில்பாட்டின் உள்ளடக்க மாகும். 2. டிெ! 9. குயிலின்முற்பிறப்பின்வரலாறு-அடி(163-157)