பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv குறிஞ்சித் தேன்' கையுறையாகக் காந்தட் பூங்கொத்தை ஏந்தி வந்து, நான் தலைவியினுடைய அழகிலே உள்ளம் பறிகொடுத்து நிற்கி றேன். உன் உதவியால் அவள் நட்பு எனக்குக் கிடைக்க வேண்டும். இந்தக் கையுறையை அவளிடம் அளித்து என் கருத்தையும் சொல்’’ என்று பணிவாகக் கேட்கிருன். தோழி முதலில் மறுக்கிருள். ஏதேதோ காரணத்தைச் சொல்கிருள். 'நீ கொண்டு வத்திருக்கிருயே, இந்த அழகான காந்தட்பூ, எங்களுக்கு அருமையான பொருள் அல்ல; எங்கள் மலை முழுவதும் ஒரே காந்தட்பூ, செக்கச் செவேல் என்று பூத்துக் கிடக்கிறது' என்று கூறி அவன் தந்த கையுறையை மறுக்கிருள். அவள் கூற்முக உள்ளது குறுந்தொகையின் முதற்பாட்டு. அது வருமாறு: செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பிற் செங்கோட்டு யானைக் கழல்தொடிச் சேனய் குன்றம் § குருதிப் பூவின் குலைக்காங் தட்டே." "எங்கள் மலை முருகனுக்குச் சொத்தமானது. போர்க் களம் முழுதும் இரத்தத்தால் சிவந்து செங்களம் ஆகும்படி யாக அவுணர்களுடைய படையையெல்லாம் கொன்று அடியோடு அழித்த பெருமான் அவன். அவன் அம்பு திரண்டது: இரத்தத்தாற் சிவந்தது. அவனுடைய யானை யின் கொம்புகூட இரத்தத்தால் சிவந்திருக்கும். கழலுகின்ற வீரவளையை எம்பிரான் அணிந்திருப்பான். அவனுக்குரிய,

  • இரத்தத்தால் , செங்களம் உண்டாகும்படியாகக் கொன்று அசுரர்களை அடியோடு அழித்த, சிவந்த திரட்சி யையுடைய அம்பையும், சிவந்த கொம்பையுடைய யானை யையும், கழலும் வளையையும் உடைய முருகனுக்குரிய இக்குன்றம், இரத்தத்தைப் போன்ற செந்நிறம் பெற்ற பூவின் கொத்துக்களையுடைய காந்தளே உடையது' என்பது இதன் உரை.