பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை xiii. உடன் இருந்தால் அழகும் ஊக்கமும் பெற்று விளங்குகிருள்: அவன் பிரிந்தால் பொலிவிழந்து வாடுகிருள் (7). ‘. . தோழி சில சமயங்களில் தலைவன் மறைவில் இருக்கும் போது அவனைப் பற்றித் தலைவியிடம் குறை கூறுவதுண்டு. (3); இதை இயற்பழித்தல் என்று இலக்கணம் கூறும், இப்படிச் சொல்வது தலைவனைக் குறை கூறவேண்டுமென்ப தற்காக அன்று. தலைவன் காதில் இது விழுமானல், யாவரும் அஞ்சும்படி களவொழுக்கத்திலே நெடுநாள் ஈடுபடக் கூடாதென்று உணர்ந்து மணம் புரிவதற்குரிய, முயற்சிகளைச் செய்வான். அதற்காகவே இப்படிப் பேசு வாள். இது வரைவு கடாதல் என்ற பிரிவில் அடங்கியது. தலைவன் பிரிய எண்ணும்போது அவன் பிரிவைத் தலைவிக்கு உணர்த்துகிருள் தோழி. அவன் பிரிந்து சென்ற பிறகு தலைவிக்கு ஆறுதல் கூறித் தேற்றுகிருள். பருவம் வந்துவிட்டதால்ை, அவர் வரவில்லையே! இனி இவளுக்கு ஆறுதல் கூறுவது எப்படி?’ என்ற கவலையும் அவளுக்கு உண்டாகிறது. - . களவுக் காலத்தில் தலைவனும் தலைவியும் அடிக்கடி சந்திப். பதற்கு.வேண்டிய துணை புரிபவள் தோழி. ஆயினும் அவன். அவளை மணந்துகொண்டு உலகறியக் கணவன் மனைவியராக, வாழ வேண்டுமென்ற ஆர்வம் அவளுக்கு இருக்கும். தலைவனைக் காண முடியாமல் பிரிந்து வாழும் நேரம் அதிக மாக இருப்பதால் தலைவி வருந்துவாள். அதனுல் அவள் உடல் மெலியும்: வேறுபாடுகள் ஏற்படும். அவற்றைக் கண்டு தாய்மார் குறி பார்க்க முயல்வார்கள். அத்தகைய, சந்தர்ப்பங்களில் எப்படியாவது அவர்களுக்குத் தலைவிக்கு ஒரு காதலன் இருக்கிருன் என்பதைக் குறிப்பாகப் புலப் படுத்துவாள் தோழி, அவ்வாறு செய்வதை அறத்தொடு நிற்றல் என்று வழங்குவர் புலவர். குறத்தியை அழைத்து வந்து கட்டும் பார்க்கும்போது, அவர் குன்றத்தைப் பாடிய பாட்டை இன்னும் பாடு, பெண்ணே’ என்று.