பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குறிஞ்சி மலர் தலை குனிந்தான். அப்போதும் அந்த முகத்தின் அழகு தனியாகத் தெரிந்தது. நீள முகம். அதில் எழிலான கூரிய நாசி எடுப்பாக இருந்தது.

'என்னடா நான் கேட்கிறேன், பதில் சொல்லாமல் கல்லடி மங்கன் மாதிரி நிற்கிறாய்? பத்து மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணி வரையில் இந்த வேலைதான் தினம் இங்கே நடை பெறுகிறதோ?”

'இல்லை சார்!... இன்றைக்கு மத்தியானம் இங்கே எதிர்த்தாற்போல் நடுத்தெருவில் ஒருபெண் மயங்கி விழுந்து விட்டாள். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த நான் ஏதோ மனதில் தோன்றியதையெல்லாம்...'

'மனத்தில் தோன்றியதையெல்லாம் அப்படியே கவிதை யாகத் தீட்டி விட்டாயோ?"

'அதில்லை சார்; இப்படி ஏதாவது தோன்றினால் அதை இந்த டைரியில் எழுதி வைப்பது வழக்கம்...'

“ஆகா எழுதி வைக்காமல் விட்டு விடலாமா பின்னே? அப்புறம் உலகத்துக்கு... எத்தனை பெரிய நஷ்டமாகப் போய்விடும்! போடா கழுதை, அச்சுக்கு வந்திருக்கிற வேலைகளையெல்லாம் தப்பில்லாமல் செய்து நல்ல பேர் வாங்க வழி இல்லை. கவி எழுதுகிறானாம் கவி. உருப்படாத பயல்.'

சொல்லி விட்டு நோட்டுப் புத்தகத்தை அவன் முகத்துக்கு நேரே வீசி எறிந்தார் மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. நோட்டுப் புத்தகம் கீழே விழுந்து விடாமல் இரண்டு கைகளாலும் எட்டிப் பிடித்துக் கொண்டான் அரவிந்தன், அவனுக்கு அந்த நோட்டுப் புத்தகம் உயிர் போன்ற தல்லவா? எத்தனை எத்தனை உயர்ந்த குறிப்புகளையும் உணர்சி களைத் துண்டு துண்டாக வெளியிடுகிற கவிதைகளையும் அவன் அந்த நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களில் செல்வம் போல் சேர்த்து வைத்திருக்கிறான். அவருக்குத் தெரியுமா அதன் அருமை?

நோட்டை வீசி எறிந்த சூட்டோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அச்சுவேலை நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/82&oldid=555806" இலிருந்து மீள்விக்கப்பட்டது