பக்கம்:குற்றால வளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

107

நிலையில் உள்ள ஒன்றைச் சமயம் நேர்ந்துழி இயம்புதல் கடனன்றோ?


இவ்வுலகில் மடமை, அதாவது அறியாமை கொண்ட மக்கள் மல்கியிருக்கக் காண்கின்றோம். கூர்ந்து நோக்கும்பொழுது குவலயத்தில் மடமையில்லார் யாண்டும் யாரும் இல்லையென்று இயம்பலாம். மிக மேதாவிகளும் ஏதேனும் ஒன்றில் அறியாமையுடையாராக விருப்பர். எல்லாம் அறிந்தவர் இறைவர் ஒருவரே. மற்றெல்லோரும் அறியாமையுடையவரே. ஆனால், அதில் வேறுபாடுண்டு. இன்றியமையாது அறிந்து தீரவேண்டிய பொருள்களை அறியாதாரும் அறிந்ததை அறிக்கவாறொழுகிப் பயனடையாதாருமே மடயர் என்று கொள்ளத்தக்கார், இன்னோரன்ன செயலுடை மடயர் மல்கியதனாலேயே இக்கட்டுரை எழுந்தது. இதுபற்றிக் கூறுவதால் எவரும் வருக்தமாட்டார்கள் என நம்புகிறேன். ஏன்? எவரையும் குறித்து வையவில்லை. கண்டிக்க்த் தக்க இச்செயலையே கூறுகிறேன்.


இன்றியமையாது அறியவேண்டிய கடனை மக்கள் அறிந்தால் உலகில் மறம் ஏன் வளர்கிறது? மடமையினாலன்றோ நில்லாதவற்றை நிலையினவென்றுணர்ந்து கரும மாற்றுகின்றார்? பிறருக்குத் தீங்குசெய்து தாம் வாழ எண்ணுவது பெரு மடமையன்றோ? பிறருக்குக் துன்பம் செய்தால் தனக்கு நிலைத்த வாழ்வேது? "கெடுவான் கேடு நினைப்பான்" என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/116&oldid=1325622" இலிருந்து மீள்விக்கப்பட்டது