பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இந்தியா வரலாற்றுக் குறிப்பு : இந்தியாவில் நீண்ட காலம் இந்திய மன்னர்களே ஆண்டு வந்தனர். 11ஆம் நூற்றாண்டி லிருந்து இந்நாட்டின்மேல் முஸ்லிம்கள் படையெடுத்தனர். வடஇந்தியாவில் முஸ்லிம் சாம்ராச்சியம் நிறுவப்பட்டது. பிறகு இந்தியாவுடன் வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர், இந்திய மன்னர்களை ஒருவர் மேல் ஒருவரை ஏவி, அவர்க ளிடையே வேற்றுமையை வளர்த்து, அதைப் பயன்படுத்தித் தம் ஆட்சியை அமைத்துக்கொண்டனர். காந்தியடிகளின் தலைமையில் இந்தியர் மேற்கொண்ட இந் திய சுதந்தரப் போராட்டத்தின் (த.க.) விளைவாக 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை 304 305 306 புது டெல்லியிலுள்ள 'ராஷ்டிரபதி பவனம்' இந்தியக் குடியரசுத் தலைவர் வாழும் மாளிகை இது. சுற்றி அழகான, பெரிய தோட்டம் ஒன்று உள்ளது. பெற்றது. 1950 ஜனவரி 26ஆம் நாள் இந்தியா ஒரு குடியரசு நாடாயிற்று. ஜனாதிபதியின் தலைமையில் தேர்ந்தெடுக் கப்பட்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற அமைப்பு முறையில் அரசாங்கம் நடத்தி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்பில் குடிமக் களின் வாக்குச் சுதந்தரத்துக்கும், சொத் துரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள் ளது. அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக இந்திய அரசாங்கம் ஐந் தாண்டுத் திட்டங்கள் வகுத்து அவற்றைச் செயல்படுத்தி வருகின்றது. பார்க்க : அடிப்படை உரிமைகள்; அரசாங்கம்; இந்திய அரசியல் அமைப்பு; இந்திய சுதந்தரப் போராட்டம். ஆண்டுதோறும் இந்திய சுதந்தர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் புது டெல்லியில் கவர்ச்சியான பலவகை அணிவகுப்புகள் நடைபெறும். குழந்தைகள் அணிவகுத்துச் செல்வதையும், இசைக் குழுவினரின் அணிவகுப்பையும் இங்குக் காணலாம்.