பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடீஸ்

57


ஆர்க்கிடுகள் வாழ்வதற்கு ஒரு வகைக் காளான் (த.க.) உதவி செய்கிறது. மரத் தின்மீது வளரும் ஆர்க்கிடுக்கு ஓரளவு உணவு தேடித் தருவது இந்தக் காளான் தான். இது, ஆர்க்கிடுவினிடம் இருந்து தானும் சிறிது உணவைப் பெறுகிறது. ஆர்க்கிடின் விதை மிகமிகச் சிறியது. கண் ணுக்குத் தெரியாது. இது காற்றில் பறந்து செல்லும். இது எங்கு விழுகின்றதோ, அங்கு தனக்கு உதவியான காளான் இருந்தால் தான் முளைக்கும்; இல்லையெனில் முளைக் காது. அழகிற்காக இன்று ஆர்க்கிடுவைக் கண் ணாடிப் பெட்டியில் வளர்க்கிறார்கள். வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், பழுப்பு எனப் பல நிறங்களில் ஆர்க் கிடுகள் அழகாக உள்ளன. சில இனங்களில் ஒரே காம்பில் பல மலர்கள் கொத்துக் கொத்தாய் அழகாகப் பூத்திருக்கும். ஒரே செடியிலும் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆர்க்கிடுவில் பல இனங்கள் நறுமணமுள்ளவை. காடுகளில் இயற்கையாக வளர்கின்ற வகைகளோடு மனிதரால் உண்டாக்கப் பட்டவையும் பல உண்டு. இப்போது சுமார் 15,000 வகை ஆர்க்கிடுகள் உள்ளன. ஆர்க்டிக் பிரதேசம் தவிர எல்லா வெப்ப மண்டல நாடுகளிலும் ஆர்க்கிடு வளரும். ஆர்க்கிமிடீஸ் கி.மு. 287-கி.மு. 212): குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கி விடுகிறது. ஆனால் மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இந்த உண் மையை முதன் முதலில் கண்டறிந்தவர் தாம் ஆர்க்கிமிடீஸ் என்னும் விஞ்ஞானி. ஆர்க்கிமிடீஸ் சுமார் 2,000 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசிலித் தீவில் சைரக்யூஸ் என்னுமிடத்தில் கி.மு. 287-ல் பிறந்தார். சைரக்யூஸை ஆண்டு வந்த அரசனுக்கு இவர் மிகவும் உதவி யாக இருந்து வந்தார். ஒரு நாள் அரசன் தங்கத்தாலான கிரீடம் ஒன்றை ஆர்க்கிமிடீஸிடம் கொடுத்து, அது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதுதானா அல்லது வேறு உலோகம் அதில் கலந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படிக் கேட்டுக் கொண் டான். கிரீடத்திற்கு எந்தவிதமான பழுதும் ஏற்படக்கூடாது என்றும் சொன் னான். முதலில் ஆர்க்கிமிடீஸுக்கு அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றே புரியவில்லை. அதே சிந்தனையுடன் ஆர்க்கி மிடீஸ் குளிக்கச் சென்றார். தண்ணீர் நிரம்பிய தொட்டியினுள் இறங்கியவுடன் தண்ணீர் மட்டம் உயர்ந்து சிறிதளவு 57 ஆர்க்கிமிடீஸ் தண்ணீர் வெளியே வழிந்ததைக் கண் டார். உடனே அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. 'யுரீக்கா! யுரீக்கா!' (கண்டு பிடித்துவிட்டேன்! கண்டுபிடித்துவிட் டேன்!) என்று கூவிக்கொண்டே தண் ணீர்த் தொட்டியிலிருந்து எழுந்து ஓடி னாராம்! ஆர்க்கிமிடீஸ் செய்தது இதுதான். ஒரு சிறு தொட்டியில் நீரை நிரப்பிக் கிரீடத்தை அதனுள் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையை அளந்து கொண்டார். பின்னர், கிரீடத் தின் எடைக்குச் சமமான சுத்தத் தங் கத்தை எடுத்து, நீர் நிரம்பிய மற்றொரு தொட்டியில் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையையும் கணக்கிட்டார். கிரீடமும் சுத்தமான தங்கமாக இருந்தால் இரு எடைகளும் ஒன்றாக இருக்க வேண்டுமல் லவா? ஆனால் அவ்விதம் இல்லை. கிரீடத் தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும், சுத்தமான தங்கத்தால் வெளி யேற்றப்பட்ட தண்ணீரின் எடையும் ஒன் றாக இருக்கவில்லையாதலால் கிரீடம் சுத்த மான தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல என்று முடிவு செய்தார். இதிலிருந்து ஓர் அரிய விஞ்ஞான உண்மையையும் இவர் வெளியிட்டார் : "ஒரு திடப் பொருளுக் குக் காற்றில் இருக்கும் எடையைவிட திரவத்தில் இருக்கும் எடை குறைவாக இருக்கும்; இவ்விரு எடைகளுக்கும் உள்ள வித்தியாசம் திடப்பொருளால் வெளியேற் றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்." இதுதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவம் ஆகும். கணிதத்தில் மட்டுமின்றி, வானவியலி லும் பௌதிகத்தின் பல துறைகளிலும் ஆர்க்கிமிடீஸ் ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை உலகுக்குத் தந்துள்ளார்.