பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இந்தியா வந்துள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கே உரிய இசைப்பண்களில் தேவாரப் பாடல்கள் பாடி வருகின்றனர். திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களுக்கும் பண் முறையிலேயே இசை வகுத்திருந்தனர். இப்போது தென்னிந்தியா முழுவதிலும் வழங்குவது கருநாடக இசை (த.க.); வட இந்தியாவில் வழங்குவது இந்துஸ்தானி இசை (த.க.). இந்தியாவில் பல இடங்களில் வகையான நடனங்களை ஆடுகின்றார்கள். இவற்றுள் தமிழ்நாட்டு பரதநாட்டியமும், கேரளத்துச் சாக்கியார் கூத்தும், கதகளி யும், ஆந்திரப் பிரதேசத்தில் ஆடும் கூச்சி பூடியும், வட இந்தியாவில் வழங்கும் கதக், மணிப்புரி இவையும் சிறப்பானவை. பரத நாட்டியம் உலகப் புகழ் பெற்றது. இந் தியாவில் நாட்டியக் கலைக்கு இருந்துவரும் சிறப்புக்குக் கோயில்கள் பலவற்றில் நாட் டியமாடும் பெண்களின் உருவங்கள் ஏராள மாகச் செதுக்கப்பட்டிருப்பதே சான் றாகும். பல இந்தியா ஒரு சிற்பக் களஞ்சியமாகும். இந்தியக் கோயில்களில் அழகான சிற் பங்களைக் காணலாம். கற்சிலைகளிலெல் லாம் உயிர்க் களையைப் பார்க்கிறோம். மலைகளிலும் குகைக் கோயில்கள் குடையப் பட்டுள்ளன. கல்லிலேயே செதுக்கப்பட்ட பூவேலைகளும், விலங்குகளின் உருவங்களும் நம் உள்ளத்தைக் கவர்கின்றன. கயா, சாஞ்சி, சாரநாத், கொனார்க்கா, காஞ்சீ புரம், மாமல்லபுரம், சிதம்பரம், தஞ்சா வூர், ஸ்ரீரங்கம், பேரூர், மதுரை, திருநெல் வேலி, சுசீந்திரம், ஹளேபீடு முதலிய ஊர்களிலுள்ள கோயில்கள் எல்லாவற்றி லும் காணப்படும் சிற்பங்களின் அழகைக் கண்டு நாம் வியப்படைகிறோம். அஜந்தா, எல்லோரா, எலிபான்டா, அமராவதி, கழுகுமலை, சிற்றண்ணல்வாயில் முதலிய இடங்களில் புகழ்பெற்ற குகைக்கோயில் கள் உள்ளன. வடக்கே காங்கிராப் பள்ளத்தாக்கிலு கிலும், அஜந்தா குகைகளிலும், தமிழ்நாட்டில் தஞ்சைப் பெரிய கோயிலிலும் அழகில் சிறந்த பல வண்ண ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் அவை இன்னும் மறையவில்லை. இந்தியா கட்டடக் கலையிலும் சிறந்து விளங்குகின்றது. இக்கலையின் வளர்ச்சி யையும், பெருமையையும் நாடு முழுவதி லும் ஆங்காங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் காணலாம்; மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைக் கோயில்கள், பௌத்த விகாரைகள், சமணப் பள்ளிகள், இந்துக் கோயில்கள் ஆகியவற்றிலும் காணலாம். வட இந் தியாவில் மௌரிய மன்னர்கள் எழுப்பிய கட்டடங்களில் கிரேக்க மரபும் கலந்துள் ளது. முஸ்லிம்களின் ஆட்சியில் இஸ் லாமியக் கலைப் பண்புகளுடன் அழகில் சிறந்த பெரிய பெரிய கட்டடங்கள் ஆங் காங்கு அமைக்கப்பட்டன. ஆக்ராவில் ஷாஜகான் கட்டியுள்ள தாஜ்மகாலும், பட்டேப்பூர்-சீக்ரியில் அக்பர் கட்டியுள்ள கட்டடங்களும் உலகப் புகழ் பெற்றவை. தென்னிந்தியாவில் சிற்பச் செல்வத்தில் சிறந்துள்ள கோயில்கள் அனைத்தும் கட் டடக் கலையின் உயர்ந்த படைப்புகளாம். ஆங்கிலேயர் ஆட்சியிலும், நாடு சுதந் தரம் பெற்ற பிறகும் புதுப்புது முறையில் பல அழகான கட்டடங்கள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன. மதம்: பண்டைக் காலந்தொட்டே இந்தியருடைய வாழ்க்கையில் மதமும், தெய்வ வழிபாடும் நெருங்கிப் பிணைந்து வந்துள்ளன. இந்து மதம் (த.க.) இன்ன காலத்தில் இன்னவரால் தோற்றுவிக்கப் பட்டது என்று திட்டமாகச் சொல்ல முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர் கடவுள் வழிபாட் டில் மிகவும் ஈடுபட்டு வந்துள்ளனர். பெளத்த மதமும், சமண மதமும் இந்து மதத்திலிருந்து பிரிந்தவையே. சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய இம் மூன்று சமயத் தலைவர்களும், நாயன்மார் களும் ஆழ்வார்களும் இந்து மதத்தை வளர்த்தவர்கள். வேதங்கள், உபநிடதங் கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங் கள் ஆகிய சமஸ்கிருத நூல்கள் இந்து மதத்திற்குத் தூண்கள் போன்றவை. இவற்றுக்கு இணையாகத் தமிழில் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ் வியப் பிரபந்தம் ஆகிய பாடல்கள் தோன்றியுள்ளன. மகாபாரதமும், இராமாயணமும் தமிழிலும் பிறமொழி களிலும் உள்ளன. உலகப் புகழ்பெற்ற திருக்குறளும், சங்க நூல்களும் தமிழுக் குத் தனிச்சிறப்பை அளிப்பன. இந்தியாவில் பல பெரியோர்கள் தோன் றிப் பக்தி வழியையும், ஒழுக்க நெறியை யும் வளர்த்தனர். பலர் உண்மையான அறிவு இன்னதென்று போதித்தனர். அவர்களுள் சைதன்யர், கபீர்தாசர், துக்காராம், மீராபாய், இராம்தாஸ், வேமன்னா, பட்டினத்தார், அருணகிரி நாதர், தாயுமானவர், குணங்குடி மஸ் தான் சாயிபு, இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந் தர், ரமணர், அரவிந்தர் ஆகியோர் சிறந் தவர்களாவர். மக்கள் தம் உலக வாழ்வைக் கடவுள் வழியோடு இணைத்து வாழ வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார். அவர் தாமே அவ்வாறு வாழ்ந்தும் காட்டினார். அஹிம்சையே இந்து சமயத்தின் உயிர் நாடி என்ற உண்மையை அவர் உலகுக்கு