பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 இராசராச சோழன் - இராசேந்திர சோழன்


தஞ்சைப் பெரிய கோயில்

ஜாவா ஆகிய கீழை நாடுகளில் சோழர் செல்வாக்கை நிலைநாட்டினார். மாபெரும் தமிழ்ப் பேரரசு ஒன்றை உருவாக்கி வரவாற்றில் ஒரு சிறப்பிடம் பெற்றவர் இம்மன்னர். இவர் தம் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் போரிலேயே கழித்தார்.

இராசராசன் உள்நாட்டு அரசாட்சியை மிகத் திறமையாக நடத்தினார். நாடு முழுவதிலும் நிலங்களை அளந்து வரம்பிட்டார். நிலவரி விதிப்பை ஒழுங்குபடுத்தினார். தம் பேரரசில் இருந்த மண்டலங்கள் ஒவ்வொன்றையும் வளநாடுகளாகப் (மாவட்டங்கள்) பிரித்துத் தல ஆட்சியைச் சீராக நிறுவினார். பல ஏரிகளைக் கட்டினர். கால்வாய்களை வெட்டினார். இராசராசன் சிறந்த சிவபக்தர். சிவபெருமானுக்காக இவர் எழுப்பியதே தஞ்சைப் பெரிய கோயில். இது 'இராசராசேச்சுரம்' என்று இவர் பெயராலேயே அழைக்கப்படுகின்றது. இதற்குப் பிரகதீசுவரம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் மிகமிக அழகானவை; மிகவும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் உள்ள கல்லின் எடை 80 டன். அவ்வளவு பெரிய கல்லை மேலே எப்படி ஏற்றினார்களோ என்று நினைக்க வியப்பாக உள்ளது. சிவலிங்கம் இருக்கும் கருவறையைச் சுற்றியுள்ள சுவர்களின்மேல் கண்கவரும் வண்ண ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றைக் காணும் எல்லாரும் அவற்றின் அழகைக் கண்டு வியந்து நிற்கின்றனர்.

இராசராசன் சிவனை வழிபட்டுவந்தவராயினும் பிற சமயங்களையும் போற்றி வந்தார். நாகப்பட்டினத்தில் பௌத்தக்கோயில் ஒன்றைக் கட்ட உதவினார். அதற்குப் பல கிராமங்களைத் தானமாகக் கொடுத்தார். இவருக்குப் பிறகு இவருடைய மகன் ராசேந்திரன் (த.க.) பட்டத்துக்கு வந்தார்.

இராசேந்திர சோழன்: தஞ்சாவூரிலுள்ள பிரசுதீகவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டியவர் முதலாம் இராசராசன் (த.க.) என்னும் புகழ்பெற்ற சோழமன்னர். அவருடைய மகன் இராசேந்திர சோழன், இவர் 1014ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தார்; 30 ஆண்டுகள் அரசாண்டார். இவரும் தம் தந்தையைப் போலவே ஒரு சிறந்த வீரராக விளங்கினார். பல மன்னர்களைப் போரில் வென்று தம் சோழப் பேரரசை மேலும் விரிவாக்கினார்.

இவர் தந்தை இராசராசன் இலங்கையின் தென்பகுதியைத் தம்பேரரசில் சேர்க்க வில்லை. அதை இவர் வென்று தம் ஆட்சிக் குள் கொண்டுவந்தார். சேர நாட்டையும், பாண்டிய நாட்டையும் வென்று சோழப் -