பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உருளைக்கிழங்கு – உலக அதிசயங்கள் ஏழு

-யில் விளைவதால் இது செடியின் வேர் என்று சிலர் நினைக்கலாம். இது வேர் அல்ல. மண்ணுக்கு அடியில் உள்ள செடியின் தண்டு ஆகும். கிழங்கின் மேற்புறத்தில் சிறுசிறு குழிகள் உண்டு. இவற்றைச் சிறிதளவு கிழங்கோடு வெட்டி எடுத்து மண்ணில் நட்டால் புதிய செடி வளரும்.

உருளைக்கிழங்குச் செடி பூக்கும்; காய்க்கும். இதற்கு விதைகளும் உண்டு. ஆனால் விதைகளிலிருந்து இனம் பெருருவதில்லை. கிழங்குகள் மூலமே புதிய செடிகள் தோன்றுகின்றன.

உருளைக்கிழங்கில் மாப்பொருள் அதிகம் உள்ளது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். இது தவிர ( வைட்டமினும் (த.க.) வேறு சில சத்துகளும் உருளைக்கிழங்கில் உள்ளன. கிழங்கைத் தவிரச் செடியின் மற்ற பாகங்கள் ஓரளவு நஞ்சு உள்ளவை. கிழங்கையுங்கூட சூரிய ஒளியில் நீண்ட நேரம் வைத்தால் பச்சை நிறம் பெற்று நஞ்சாக மாறலாம். ஆதலால் இதை உண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும்.

செயற்கை ரப்பர், பிளாஸ்டிக், ஒட்டுப் பசை, ஆல்கஹால் (த.க.) ஆகியவற்றைச் செய்யவும் உருளைக் கிழங்கு பயனாகிறது. உருளைக்கிழங்கு மிக அதிகமாக விளையும் சில நாடுகளில் அவற்றை ஆடு, மாடுகளுக்குத் தீனியாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் வங்காளம், பீகார், ஆசாம் ஆகிய மாநிலங்களிலும் பெங் களூர், நீலகிரி முதலிய இடங்களிலும் உருளைக் கிழங்கு பயிராகிறது.


உலக அதிசயங்கள் ஏழு : கட்டடங்கள் கட்டுவதற்கு எந்திரங்களும் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பல்லாவிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பல பெரிய பெரிய கட்டடங்களையும், கோயில்களையும், சிலைகளையும் எழுப்பியிருந்தனர். இவை அழகிலும், அளவிலும் அற்புதங்களாக விளங்கின. இவற்றுள் மிகச் சிறந்தவை எனக் கருதப்பட்டவற்றை கி.மு. 100-ல் ஏழு அதிசயங்களாகத் தொகுத்தார் சீடான் ஆன்டி பேட்டர் என்பவர். இவற்றுள் முதலில் குறிக்கப்பட்டுள்ள பிரமிடுகளைத் தவிர மற்ற எல்லாம் அழிந்துவிட்டன. எனினும் இவை உலகின் ஏழு அதிசயங்கள் என இன்றும் போற்றப்படுகின்றன.

பிரமிடுகள் : இவை எகிப்து நாட்டில் இன்றும் உள்ளன. இவையே ஏழு அதிசயங்களில் மிகப் பழமையானவை. சுமார் 4,500 ஆண்டுகளுக்குமுன் எகிப்து மன் னர்களுக்குக் கட்டிய கல்லறைகளே இந்தப் பிரமிடுகள்.

உலக அதிசயங்கள் அலெக்சாந்திரியா கலங்கரை விளக்கம் மாசோலஸ் கல்லறை பிரமிடுகள் டயானா கோயில் ரோட்ஸ் பேருருவச் சிலை ஜூப்பிட்டர் சிலை பாபிலன் தொங்கு தோட்டங்கள்