பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78 ஐஸ்கிரீம் - ஐஸ்லாந்து


ஐன்ஸ்ட்டைன் ஜெர்மனியில் உல்ம் என்ற இடத்தில் பிறந்தார். மூனிக் நகரிலும், பின்னர் சுவிட்ஸர்லாந்திலும் கல்வி பயின்றார். கணிதத்தைத் தவிர வேறு பாடங்களில் இவர் ஊக்கங் காட்டவில்லை.

ஐன்ஸ்ட்டைன் 1905-ல் எழுதிய நான்கு கட்டுரைகள் விஞ்ஞானிகள் பலருடைய கருத்தைக் கவர்ந்தன. இவர் தம் கருத்துகளை விரிவாக்கி 1916-ல் 'சார்புக்கொள்கை' என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இதற்காக இவருக்கு 1921-ல் நோபெல் பரிசு (த.க.) அளிக்கப்பட்டது,

ஐன்ஸ்ட்டைனுடைய சார்புக் கொள்கை மிகவும் சிக்கலானது. அதை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பௌதிகத்தின் உண்மைகள் பலவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள சார்புக் கொள்கை பயன்பட்டு வருகின்றது. ஒரு பொருளின் எடைக்கும், அப்பொருளிலிருந்து பெறக்கூடிய சக்திக்கும் உள்ள தொடர்பை சார்புக் கொள்கை விளக்குகிறது. இந்த உண்மைதான் அணுகுண்டு செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது.

ஐன்ஸ்ட்டைன் 1914 முதல் 1933வரை பெர்லினில் உள்ள பௌதிக ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவராகப் பணியாற்றினார். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லருக்கு (த.க.) அஞ்சி 1933-ல் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார். அமெரிக்காவிலேயே தங்கியிருந்து தம் விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடத்திவந்தார்.


ஐஸ்கிரீம்: உங்களில் பலர் ஐஸ்கிரீமை விரும்பிச் சாப்பிடுவீர்கள். அது சுவையானது; நல்ல சத்து நிறைந்தது. ஐஸ்கிரீமில் முக்கால் 'பகுதிக்கு' பகுதிக்கு மேல் பாலும் பாலேடுந்தான் உள்ளது. சர்க்கரையும் மணம் ஊட்டும் பொருள்களும் ஐஸ்கிரீமில் சேர்கின்றன. சில சமயங்களில் பழத்துண்டுகள், இனிய பருப்பு வகைகள், முட்டை, சர்க்கரைப் பாகு முதலியனவும் சேர்ப்பது உண்டு.

சிலர் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வார்கள். ஐஸ்கிரீம் செய்வதற்கு வேண்டிய பால், பாலேடு, சர்க்கரை, பழம், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைத் தகுந்த அளவில் கலந்து ஒரு பாத்திரத்தில் இடுவார்கள். வாளி போன்ற வாயகன்ற வேறு ஒரு பாத்திரத்தின் நடுவில் அதை வைத்து, அதைச் சுற்றிலும் பனிக்கட்டியையும் உப்பையும் கலந்து நிரப்புவார்கள். உப்பு கலந்த பனிக்கட்டி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பாத்திரத்தினுள் ஊற்றிய பால் கலவை சிலமணி நேரத்தில் உறைந்து ஐஸ்கிரீமாக மாறிவிடும். சிலர் பால் கலவையைக் குளிர்ப் பெட்டியிலேயே வைத்து ஐஸ்கிரீம் செய்வதுண்டு. ஆனால் ஒரு வீட்டுக்கு வேண்டிய அளவு ஐஸ்கிரீம் மட்டுந்தான் குளிர்ப் பெட்டிகளில் செய்யலாம்.

விற்பனைக்கு ஐஸ்கிரீம் தயாரிக்கத் தனித் தொழிற்சாலைகள் உள்ளன. இத் தொழிற்சாலைகளில் முதலில் பால், பாலேடு, சர்க்கரை, நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைத் தகுந்த அளவில் கலந்து ஒரு தொட்டியில் இட்டுக் கொதிக்க வைப்பார்கள். அவ்வாறு செய்வதால் உடல் நலத்தைக் கெடுக்கும் பாக்ட்டீரியாக்கள் அழிந்துவிடும். பிறகு கலவையை நன்றாகக் கிளறி ஆறவிடுவார்கள். பிறகு அதைக் குளிரூட்டும் அறைகளில் வைத்துக் குளிர வைப்பார்கள். அது உறைந்து வரும்போது பழத்துண்டுகளையும் இனிய பருப்புகளையும் சேர்த்து அதை மேலும் குளிர வைப்பார்கள். பால் கலவை முற்றிலும் கட்டியாகி ஐஸ்கிரீமாக இறுகிவிடும். பிறகு அதைத் துண்டுதுண்டாகச் செய்து காகிதங்களில் சுற்றுவார்கள்; அல்லது காகிதக் கிண்ணங்களில் நிரப்புவார்கள். இதுதான் நீங்கள் கடைகளில் வாங்கும் ஐஸ்கிரீம்.

சுத்தமான இடங்களில் தயார் செய்யும் ஐஸ்கிரீம்தான் உடலுக்கு நல்லது. அசுத்தமான சூழ்நிலையில் தயாரித்து விற்கப்படும் ஐஸ்கிரீமிஸ் நோய் உண்டாக்கும் கிருமிகள் நிறைய இருக்கும். ஆகையால் அவை உடல் நலத்திற்குத் தீங்குண்டாக்கும்.


ஐஸ்லாந்து: அட்லான்டிக் சமுத்திரத்தின் வட பகுதியில் உள்ள ஒரு சுதந்தரக் குடியரசு நாடு ஐஸ்லாந்து. இது மலைகள் நிறைந்த ஒரு தீவு. 1,03,400 சதுர கிலோமீட்டர் பரப்பு உள்ளது. இங்குப் பனியும் குளிரும் அதிகம். மலைமீது எப்போதும் பனி உறைந்து கிடக்கும். ஆனால் ஒரு வியப்பு என்ன தெரியுமா? இங்கு வெந்நீர் ஊற்றுகள் பல உண்டு. எரிமலைகள் இந்நாட்டில் இருப்பதே இதற்குக் காரணம், இந்த ஊற்றுகளிலிருந்து கிடைக்கும் வெந்நீரை இந்நாட்டு மக்கள் குளிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகின்றனர். இத்- ஐஸ்லாந்து