பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

92 ஓவியம்


ஆதி மக்கள் குகைச் சுவரில் தீட்டிய ஓவியம். இது ஸ்பெயின் நாட்டில் உள்ளது. -களைப் பல வண்ணங்களில் தீட்டினார்கள். உலகில் பல இடங்களில் அவ்வுருவங்கள் இன்றும் அழியாமல் உள்ளன. இந்தியாவில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இடங்களில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பானை ஓட்டின்மேல் தீட்டிய அழகிய ஓவியங்கள் இப்போது கிடைக்கின்றன. அதே காலத்தில் எகிப்து, கிரீஸ், கல்தேயா, அசிரியா, சீனா ஆகிய நாடுகளிலும் ஓவியக்கலை சிறந்து விளங்கிற்று. எகிப்தியர்களும் கிரேக்கர்களும் தனிப்பட்ட ஓவிய முறைகளைக் கையாண்டார்கள்.

பண்டைக் காலத்தில் இந்தியாவில் ஓவியக் கலை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்தது. தமிழ்நாட்டில் சிற்றண்ணல் வாயில் குகைகள், காஞ்சீபுரம் கைலாச நாதர் கோயில், தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ஆகிய இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கண்கவரும் வண்ண ஓவியங்களைக் காணலாம். அஜந்தா, எல்லோராக்குகை ஓவியங்கள், உலகப் புகழ் பெற்றவை. வட இந்தியாவில் மொகலாய மன்னர் காலத்திலும், ரஜபுத்திர மன்னர் காலத்திலும் பல அழகிய ஓவியங்கள் எழுதப்பெற்றன.

சென்ற ஐந்நூறு ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில், திறமைமிக்க ஓவியர் பலர் வாழ்ந்தனர். அவர்கள் எழுதிய ஓவியங்கள் இன்னும் எல்லோராலும் பாராட்டப்படுகின்றன. மைக்கே லஞ்சிலோ, வியனார்டோ-டா-வீன்சி, சர் ஜோஷுவா ரெயினால்ட்ஸ், டர்னர் ஆகியவர்கள் அவர்களுள் சிலர். வான்கோ, பிக்காசோ முதலியவர்கள் புதுமுறையிலும் ஓவியம் வரைந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். இம் முறையினை இந்தியாவிலும் பல ஓவியர்கள் இப்பொழுது பின்பற்றுகிறார்கள்.

[[அஜந்தா குகை ஒன்றில் காணப்படும் ஓர் ஓவியம். பாறையில் செதுக்கப்பட்ட புத்தரின் மிகப் பெரிய உருவச் சிலையின் காலடியில் அமர்ந்து புத்தபிக்கு ஒருவர் வணங்குகிறார்.]] அஜந்தா ஓவியம்