பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 பீவர் - புகைத்திரை வகை ('Gun) நவீன பீரங்கிகளில் மூன்று உண்டு. பீரங்கித் துப்பாக்கி என்பது முதல் வகை. இதில் துப்பாக்கிக் குழல் நீளமாக இருக்கும். இது குறைந்த தூரமும், தொலைதூரமும் சுடுவதற்கு ஏற்றது. சிறு பீரங்கி (Mortar) என்ற இரண்டாவது வகையில் துப்பாக்கிக் குழல் குறுகலாக இருக்கும். பகைவர் அமைத் துள்ள தடைகளுக்கு அப்பாலுள்ள இலக்கு களைத் தாக்குவதற்கு ஏற்றவாறு உயர்ந்த கோணத்தில் சுடுவதற்கு இது பொருந்த மானது. மூன்றாவது வகையான குட்டைப் பீரங்கியில் (Howitzer) துப்பாக்கிக் குழல் குறுகலாகவும், வாய் அகலமாகவும் இருக்கும். முற்றுகைகளிலும், குழி தோண்டி அதில் பதுங்கியிருந்து செய்யும் போர்களிலும் செங்குத்தான கோணங் கனில் சுடுவதற்கு இது பயன்படும். இக்காலத் தரைப்படையின் (த.க.) முக்கியப் பிரிவாக பீரங்கிப்படை விளங்கு கிறது. காலாட்படையினரை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கவும், எதிரிகபைத் தாக்கவும் பீரங்கிப்படை பயன்படுகிறது. பீவர் ( Beaver ) : அணைகட்டும் திறமையுள்ள பிராணி பீவர். தன்னுடைய கூர்மையான பற்களினால் இது மரங்களின் அடிப்பகுதியைக் கொறித்து அறுத்து மரங் களைக் கீழே சாய்க்கிறது. பின்பு இம்மரங் களைத் துண்டுதுண்டாகச் செய்து ஆறு கனின் குறுக்கே அணை கட்டுகிறது. இது குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் பாலூட் டிகள் வகுப்பைச் சேர்ந்தது. கொறிக்கும் பிராணிகளில் இதுதான் பெரியது. பீவர் ஒரு மீட்டர் வரை நீளமிருக்கும். இதன் வாலின் நீளம் மட்டும் சுமார் 30 சென்டிமீட்டர் உள்ளது. முன்கால்கள் குட்டையானவை. பின்கால்களின் விரல் களிடையே சவ்வுபோன்ற தோல் உள்ளது. பீவர் சிவப்பு சுலந்த பழுப்பு நிறமுள்ளது. இதன் மயிர் அடர்த்தியாகவும் மென்மை யாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதற்காக இதைப் பெருமளவில் வேட்டை யாடுகிறார்கள். நன்றாக தீந்துவதற் கேற்ற உடலமைப்பு கொண்டது பீவர். இதன் வால் தட்டையாவிருப்பதோடு அதன்மேல்பகுதியில் செதில்கள் காணப் படுகின்றன. இது தடுப்பு போன்று பயன் படுகிறது. நீரில் மூழ்கும்போது பீவர் தன் காதின் துளைகளையும் நாசித் துரைகளையும் மூடிக்கொள்ளும். பீவர்கள் அணைகட்டி நீரைத் தேக்கும் குணங்களில் தம் வீடுகளை அமைக்கின்றன. மரத்துண்டுகள், கிளைகள், பாறைகள் மண் முதலியவற்றைக் கொண்டு ஒரே அறையுள்ள சிறு வீடுகளை பீவர்கள் கட்டு பீவர் கின்றன. இவை கூண்டு வடிவில் இருக் ரும். குளத்திலிருந்து தரைமட்டம் சிறிது உயர்ந்திருக்கும். நீரிலிருந்தவாறு வீட்டில் புகுவதற்கு இரண்டு குடைவு வழிகள் அடிவில் செல்லும். குளங்களிலிருந்து வெள்ளநீர் வழிந்தோடுவதற்கு வசதியாக வும் கோடைகாலத்தில் வேண்டிய அளவு நீர் தேங்கி நிற்பதற்கு ஏற்றவாறும் அணைகள் கட்டப்படுகின்றன. இதனால் வீடுகளில் நீர் புகுந்து மழைகாலத்தில் விடாமலும், கோடையில் நீர் குறைந்து விடாமலும் குளத்தின் நீர்மட்டம் ஒரே சீராக இருக்கும். மரப்பட்டைகள், வேர்த்துண்டு, தனிர் கள் முதலியன இவற்றின் முக்கிய உணவு. பீவரி ஒரு தடவையில் மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும். பீவர்களில் இருவகையுண்டு. ஒருவகை வட அமெரிக்காவில் இருக்கிறது. மற்றொரு வகை ஐரோப்பாவிலும் வட ஆசியாவிலும் காணப்படுகிறது. புகைத்திரை (Smoke Screen) : அடுப்பி லிருந்து புசை மிகுதியாகப் பரலினால் எதையும் பார்க்கமுடியாதபடி அது மறைத்துவிடும் அல்லவா? அதேபோலப் போர்களின்போது, அடுப்பிலிருந்து வரும் புகையைவிட மேலும் அடர்த்தியான கரும் புகையைப் பெருமளவில் உண்டாக்கி அதை ஒரு திரைபோலப் பயன்படுத்து வதுண்டு. இதனால் கப்பல்கள் இருப்பதை யும். படைவீரர்கள் நடமாடுவதையும் எதிரிகள் தெரிந்துகொள்ள முடியாது. செயற்கையாக உண்டாக்கும் இந்தத் நிரைக்குப் புகைத்திரை என்று பெயர். உலக யுத்தங்கள் இரண்டிலும் கடற் போர்களில் பல போர்க் கப்பல்கள் தற்காப்புக்காகப் புகைத்திரையை வெற்றி கரமாகப் பயன்படுத்தின. ராடார் (த.க.) என்ற கருவியின் உதவியால் அடர்த்தி