பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 புவி ஈர்ப்பு- புவிக்காந்தத்துவம் களாகச் சோதனைகளை நடத்தியபின், பூமி யானது எல்லாப் பொருள்களையும் தன்னை நோக்கி இழுக்கிறது என்ற உண்மையை அவர் கண்டுபிடித்தார். பூமியின் இத்தகைய இழுக்கும் ஆற்றலுக்குத்தான் 'புவி ஈர்ப்பு' என்று பெயர். இந்த ஈர்ப் பினால்தான் மேல்நோக்கி எறியப்படும் பொருள்களெல்லாம் மீண்டும் பூமிக்கே திரும்புகின்றன. மேட்டுப்பாங்கான இடத்திலிருந்து நீர் தாழ்ந்த மட்டத்திற்கு ஓடுகிறது. இது புவி ஈர்ப்பினால்தான். ஒரு வட்டமான தட்டை வேகமாகச் சுழலும்படி செய்து அதன் விளிம்பில் ஒரு நாணயத்தை வைத் தால் அந்த நாணயம் உடனே தூாக்கு யெறியப்படும். இதேபோல் தாமும் மியி ள்ள மற்றப் பொருள்களும் பூமியின் சுழற்சியால் தூக்கியெறியப்பட வேண்டும்; ஆனால் அவ்வாறு நிகழாமல் புவி ஈர்ப்பு தடுக்கிறது. கடல் நீரும் புளி யைச் சூழ்ந்துள்ள வாயுக்களும் இவ்விசை யால் இழுக்கப்பட்டு விண்வெளியில் சிதறிச் செல்லாமல் தடுக்கப்படுகின்றன. பூ லு புவி ஈர்ப்பினால்தான் பூமியின் மேற் பரப்பில் உள்ள பொருள்களுக்கு எடை இருக்கிறது. இந்த எடை வானத்தில் உயர்ந்து செல்லச் செல்லக் குறையும். ஒரு பொருளைச் சுமார் 3,000 கிலோ மீட்டர் உயரமுள்ள ஓர் இடத்திற்கு எடுத் துச் சென்று நிறுத்துப் பார்த்தால் அங்கு அதன் எடை குறைவாகவே இருக்கும். உயர்ந்து செல்லச் செல்ல, புவிஈர்ப்பு ஆற்றல் குறைகிறது. மேலும் ஒரு குறிப் பிட்ட உயரத்தில் அந்த ஆற்றல் இல்லாமலே போய்விடுகிறது. அங்கு எந்தப் பொருளுக்கும் எடையே இராது. இதனால்தான் விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் மிக்க உயரத் தில் சென்றதும் எடையற்ற விந்தையான விண்வெளிக் நிலையை அடைகிறர்கள். கலத்திலுள்ள பென்சில் முதலிய பொருள். கள் எடையற்றதாகின்றன; சிறிது நகர்த் தப்பட்டாலும் அவை விண்வெளிக்கலத் தினுள்ளே அங்குமிங்கும் மிதந்து செல் கின்றனர் பூமிக்கு மட்டுமின்றி விண்ணிலுள்ள எல்லாக் கிரகங்களுக்கும், துணைக் கிரகங் களுக்குங்கூட ஒன்றையொன்று ஈர்க்கும் கவர்ச்சி இதற்குக் ஆற்றல் உள்ளது. (Gravitation ) என்று பெயர். சர் ஐசக் நியூட்டன் இதையும் கண்டறிந்தார். சூரியன் பூமியை இழுக்கிறது; பூமி சந்திரனை இழுக்கிறது. மற்ற கிரகங்களும் சூரியனும் இவ்வாறே ஒன்றையொன்று இழுக்கின்றன. அதனால்தான் இரசுங்கள் தமக்கே யாவும் விண்வெளியில் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. உரிய புவிக்காந்தத்துவம் (Geomagnetism) : காந்தம் (த.க.) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். ஒரு காந்த ஊசி யைத் தொங்கவிட்டால் அது வடக்கு- தெற்காகத் திரும்பி நிற்கிறது. இது காத் தத்தின் முக்கியமான பண்பாகும். நாம் வாழும் பூமியும் ஒரு பெரிய காந்தத்தைப் போல் செயல்படுகிறது. பூமிக்குக் காந்த சக்தி உண்டு என்பதைப் பல நூற்றண்டு களுக்கு முன்பே விஞ்ஞானிகள் அறிந்திருந் தணர், காந்தத்திற்கு வடக்கு, தெற்கு என்று இரண்டு துருவ முனைகள் இருப்பது போன்று புவிக்காத்தத்துக்கும் இரண்டு துருவங்கள் உண்டு. பூமியின் வட துருவத் திற்கும் தென் துருவத்திற்கும், காந்தமுள் காட்டும் வடக்கிற்கும் தெற்கிற்கும் சிறிது வேறுபாடு உண்டு. திசைகாட்டி (த.க.) மூலம் இதை அறியலாம். நாணயம் கிராமபோனில் ஓர் இசைத் தட்டின் விளிம்பில் ஒரு நாண யத்தை வைத்து, இசைத்தட்டை வேகமாகச் சுழலும்படிச் செய்யுங் கள். நாணயம் தூக்கியெறியப் படுகிறது அல்லவா? அதே போல, பூமியின் சுழற்சியால் அதன் மேற்பரப்பில் இருக்கும் மனிதனும் தூக்கியெறியப்பட வேண்டும்; ஆனால் அவ்வாறு நிகழாவண்ணம் தடுக்கிறது புவி ஈர்ப்பு.